இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகள்
நாம் அன்றாடம் உண்ணும் உணவு முறையில் ஒரு சில உணவுகளை தவிர்த்துக் கொண்டும் ஒரு சில உணவுகளை முறையாக எடுத்துக் கொண்டாலே இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ள உணவுகளை உண்பதால் இதயம் சார்ந்த நோய்கள் அதிகமாக ஏற்படுகின்றது.
உதாரணமாக மாரடைப்பு, இருதய செயலிழப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களை கூறலாம்.
அந்த வகையில் இவற்றை ஒரு சில எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க முடியும், அவ்வாறான வழிமுறைகளை தெரிந்துக் கொள்வோம்.
ஆரோக்கியத்தை கட்டியெழுப்பும் உணவு பழக்கங்கள்
அதிகளவு உணவுகளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக் கொள்வது சிறந்தது. ஏனெனில் அவற்றில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து, வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மினரல்ஸ் போன்ற சத்துக்கள் அதிகமாகவும் காணப்படுகின்றன. இதனால் நோயின் தாக்கம் குறைவாக இருக்கும்.
எமது உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். இதில் காணப்படும் சோடியம் அளவை கண்காணிப்பது மிக அவசியமாதொன்று. இதனை குறைப்பதன் மூலம் உயர்ரத்த அழுத்தம் மற்றும் இதய கோளாறுகளை தடுக்கலாம்.
கொழுப்பு உணவுகள் உடலில் நோய் ஏற்படுவதற்கு வழிவகுக்கின்றன. இதில் காணப்படும் ஆலிவ், நட்ஸ், சோயாபீன் போன்றவை உடலுக்கு நல்லதன்று. எனவே கொழுப்பு உணவுகளை குறைத்துக் கொள்வது சிறந்தது.
ஒரு மனிதன் குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட அளவு சர்க்கரை சத்து மட்டுமே உடலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை ஆய்வு செய்ததில் ஒரு பெண் ஒரு நாளுக்கு 6 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் ஆண் 9 டீஸ்பூன் சர்க்கரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
தினமும் நாம் உண்ணும் உணவோடு கொலஸ்ட்ரால் அளவு குறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். காரணம் உடலின் எடை அதிகரிப்பிற்கும் வழி சமைக்கின்றன. மற்றும் ஆட் அடேக் போன்ற நோய்களின் தாக்கத்தை ஏற்படுத்தும்