இவர்களை மட்டும் தீவிரமாக தாக்கும் கொரோனா: ஆபத்து இருமடங்கு இருக்குமாம்
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்ளை கொரோனா இரண்டு மடங்கு அதிகமாக தாக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் உள்ள சாபாலோ பல்கலைகழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் லிமா பகுதியில் இந்த ஆய்வை மேற்கொண்டனர். 1,285 பேரிடம் டெங்கு வைரஸிற்கு எதிரான ஆன்டிபாடிகளை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை சோதனைக்கு எடுத்துக்கொண்டனர்.
இந்த ஆய்வின் முடிவில் டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் இருமடங்கு ஆபத்துகளை எதிர்கொள்வதை கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து பயோமெடிக்கல் சயின்ஸ் பேராசிரியர் கூறுகையில், “டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் போது அதிக பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.
இது இரண்டு நோய்த் தொற்றுகளுக்கு இடையில் இருக்கும் சினெர்ஜிக் தொடர்பு காரணமாக ஒன்று மற்றொன்றின் விளைவுகளை அதிகரிக்கிறது.
டெங்கு வைரசை கட்டுப்படுத்துவதற்கு கொரோனா மிகப்பெரிய தடையாக இருக்கிறது. மேலும், டெங்கு பாதித்தவர்களை கொரோனா மிகப்பெரிய அளவில் பாதிக்கிறது” என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே இந்தியாவில் கொரோனாவைத் தொடர்ந்து கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை என நோய் தாக்கிவரும் நிலையில், தற்போது இந்த ஆய்வின் தகவல் மேலும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.