டெங்கு காய்ச்சலுக்கான ஆரம்ப அறிகுறிகளும் சாப்பிட வேண்டிய உணவுகளும்...
இப்போதெல்லாம் நோய்களுக்கு பஞ்சம் இல்லாத அளவிற்கு புது புது நோய்களும் மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அப்படி நாடு முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இது கொசுக்களால் பரவுகிறது. அதிலும் ஏடிஸ் ஈஜிப்டி என்ற ஒரு வகை பெண் கொசுக்கள் கடிப்பதால் தான் இந்த தொற்று ஏற்படுகிறது. டெங்கு காய்ச்சலில் இதிலிருந்து கவனமாக இருக்க நினைப்பவர்கள் உங்கள் உடலில் இப்படியான அறிகுறிகள் இருந்தால் வைத்தியரிடம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
அந்தவகையில் உங்களுக்கு டெங்கு இருப்பதற்கான ஆரம்ப அறிகுறிகள் இவைதான்.
டெங்குவின் 10 ஆரம்ப அறிகுறிகள்
- தொடர்ந்து நீடிக்கும் காய்ச்சல்
- தசைகள் மற்றும் கடுமையான உடல் வலி
- தொடர்ச்சியான தலைவலி
- கண்களில் வலி
- கடுமையான வயிற்று வலி
- கால்களில் வீக்கம்
- உடல் உள்ளே இரத்த கசிவு
- கடுமையான குமட்டல்
- உடல் சோர்வு
- வாந்தி
சாப்பிட வேண்டிய உணவுகள்
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் காய்ச்சலில் இருந்து குணமாக பப்பாளி இலையில் ஜுஸ் செய்து குடிக்கலாம் இது இரத்த பிளேட்டுக்களை அதிகரிக்கும்.
டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபட மாதுளை உகந்தது. இதிலிருக்கும் சத்துக்களும் கனிமங்களும் இரும்புச் சத்தை அதிகரிப்பதோடு இரத்த உருவாக்கத்திற்கும் பங்காற்றுகிறது.
டெங்கு காய்ச்சல் ஏற்படும் போது உடலில் நீர்ச்சத்து இழந்து விடும். அதனால் எலெக்ட்ரோரைட் எனும் முக்கியமான ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது.
மஞ்சளை பாலுடன் கலந்து குடிக்கும் போது பாலில் உள்ள கல்சியம் எலும்புகளுக்கு அதிக வலுவைக் கொடுக்கும்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும், சமநிலையாக்கவும் வெந்தயம் மிகவும் உதவும்.
ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் ஏனைய சத்துக்கள் டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபட சிறந்த பங்காற்றுகிறது.
டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த பிளேட்டுக்கள் குறையாமல் இருக்க அதிக சத்துக்கள் நிறைந்த ப்ரோக்கோலியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |