ஒரே மாதிரியான அறிகுறி! டெங்கு காய்ச்சலா கொரோனாவா? கண்டறிவது எப்படி?
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளும் கிட்டத்தட்ட கொரோனா அறிகுறிகளைப் போன்றே இருப்பதால் இரண்டையும் எப்படி வேறுபடுத்திப்பார்ப்பது என்பதை தெரியாமல் குழம்பி வருகின்றனர்.
அந்த வகையில், அதைப்பற்றி இங்கு தெரிந்துகொள்வோம், கொரோனா தொற்றின் அறிகுறிகள் மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்களின் அறிகுகளோடு ஒத்துப்போகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது மலேரியா, லெப்டோஸ்பிரோசிஸ், மஞ்சள் காமாலை போன்ற நோய்களின் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைவலி மற்றும் மூட்டு வலி போன்ற அறிகுறிகளை அனுபவிக்கின்றனர்.
இவையெல்லாம் கொரோனா பாதிப்பின் அறிகுறிகளாக இருந்தாலும், இருமல், வாசனை இழப்பு அல்லது சுவை இழப்பு போன்ற கூடுதல் அறிகுறிகள் மற்றும் தொண்டை புண் ஆகியவை கொரோனா பாதிப்பிற்கான நோயறிதலை கண்டறிய உதவக்கூடும்.
மேலும், திடீரென அதிக காய்ச்சல், குமட்டல், வாந்தி, கடுமையான உடல் வலி, பிளேட்லெட் எண்ணிக்கை, தடிப்புகள் போன்றவை டெங்குவால் ஏற்படும் பொதுவான அறிகுறிகள் ஆகும். லெப்டோஸ்பிரோசிஸ் நோயை பொறுத்தவரை, சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள், மஞ்சள் காமாலை, கண்களில் சிவத்தல் ஆகியவை பொதுவான அறிகுறியாக இருக்கும்.