தினமும் முட்டை சாப்பிட்டலாமா? பெரியவர்கள் எத்தனை முட்டை சாப்பிடலாம்
ஒரு முட்டையில் எமது எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் Dமற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.
ஆகவே தினமும் ஒரு முட்டையை எடுத்துக் கொண்டால் எமது உடம்பு பலமானதாக மாறும். மேலும், எமது உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ, பி, சி, டி போன்ற வகையான சத்துக்களும் உள்ளன.
அதுமட்டுமல்லாது தைதாக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில் அதிகம் நிறைந்துள்ளது.
இப்படி பல நன்மைகளை கொண்டுள்ள முட்டையை தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும்.
தினமும் முட்டை சாப்பிட்டால்...
1. இதயப்பிரச்சினை இருப்பவர்கள் தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால் இதய நோய் பாதிப்பு குறையும்.
2. முட்டையை மாத்திரம் சாப்பிடுபவர்களுக்கு உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் கிடைக்கும்.
3. முட்டையை தினமும் சாப்பிட்டால் பசி குறையும்.
4. முட்டையானது உடலில் ஹெச்.டி.எல் எனும் அமிலத்தை அதிகரித்து கொழுப்பைக் கரைக்கும்.
5. முட்டையானது உடல் எடையைக் குறைக்கிறது அதாவது முட்டையில் குறைவான கலோரிகள் இருப்பதால் உடல் எடையும் குறையும்.
6. வளர்ந்தவர்கள் ஒரு நாளைக்கு 2 இலிருந்து 3 முட்டைகளை சாப்பிடலாம் குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டைக் கொடுக்கலாம்.
7. உடல் உள் உறுப்புக்களில் இருக்கும் வீக்கங்களை தடுக்கிறது.
8. முட்டையில் இருக்கும் சத்தானது இதய நோய் அபாயத்தை கட்டுப்படுத்துகிறது.