கெட்ட கொழுப்பை வேக வேகமாக கரைக்கும் அதி சக்திவாய்ந்த பானம்!
கெட்ட கொழுப்புக்களை எரிக்கும் அற்புத பானம் குறித்து இன்று தெரிந்து கொள்ளுங்கள்.
கறிவேப்பிலையில் கெட்ட கொழுப்புக்களை எரிக்கும் பொருள் அதிகம் உள்ளது.
கறிவேப்பிலை செரிமான பிரச்சனைகளைப் போக்கும்.
உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும். இதனை கொண்டு பானம் செய்து வாரம் ஒரு முறை பருகினால் அதற்கான முழு பலனும் கிடைக்கும்.
கருவேப்பிலை ஃப்ரஷ்ஷாக ரொம்ப நாளா இருக்கனுமா.... இதுதான் ஒரே ஒரு வழி!
தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை - 1 கைப்பிடி
- கொத்தமல்லி - சிறிது
- புதினா - 1 கைப்பிடி
- இஞ்சி - ஒரு சிறிய துண்டு
- நாட்டு சர்க்கரை அல்லது பனங்கல்கண்டு - 1 மேசைக்கரண்டி
- தண்ணீர் - 1/2 கப்
- எலுமிச்சைச் சாறு - 2 மேசைக்கரண்டி
ஆண்கள் தினமும் ஒரே ஒரு பேரிச்சம் பழம் சாப்பிடுங்க…நீரிழிவு நோயாளிகளே எச்சரிக்கை!
செய்முறை
கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி மற்றும் நாட்டு சர்க்கரை அல்லது பனங்கல்கண்டு சிறிது தண்ணீர் .
சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
மீந்துப்போன சாதத்தில் சுவையான உளுந்து வடை - செய்வது எப்படி?
நன்கு அரைத்தவுடன் மீதம் இருக்கும் தண்ணீர் சேர்த்து வடிகட்டி எலுமிச்சைச்சாறு சேர்க்கவும்.
தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகள் சேர்த்து ஜில்லென்று பரிமாறவும்.
சூப்பரான கறிவேப்பிலை புதினா ஜூஸ் ரெடி.