உங்களை கண்களை ஆரோக்கியமாக பாதுகாக்க இந்த ஜூஸ் குடிங்க
ஒரு மனிதனுக்கு கண் என்பது மிக முக்கியமான உறுப்பாகும் இந்த உறுப்பு பாதிக்கப்பட்டால் நமது வாழ்க்கை இருளடைந்து விடும். ஆனால் தற்போது பலருக்கு கண்ணில் ஏதாவது ஒரு கோளாறு இருக்கத்தான் செய்கிறது.
ஆனால் இந்தக் கண்களை பாதுகாப்பதற்கு வெள்ளரிக்காய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் இந்த வெள்ளரிக்காயில் ஜுஸ் செய்து குடித்தால் இன்னும் கண்கள் பாதுகாக்குமாம்.
வெள்ளரிக்காயின் நன்மைகள்
வெள்ளரிக்காயில் நிறைய நீர் உள்ளடங்கி இருப்பதோடு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த காபிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன.
வெள்ளரிக்காயானது கோடை காலத்திற்கு அதிகம் உதவுகிறது. இதனை பச்சையாகவும் சாப்பிடலாம் சமைத்தும் சாப்பிடலாம்.
- வெள்ளரிக்காயில் அதிக நார்ச்சத்து இருக்கிறது இது வயிறு கோளாறு, செரிமானப் பிரச்சினை, மலச்சிக்கல் என்பவற்றை தடுக்கும்.
- வெள்ளரிக்காயில் அதிக ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது இது சிறியவர் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.
- இது சிறுநீரகங்களை பாதுகாக்கிறது.
- வெள்ளரிக்காயில் வைரஸ், பாக்டீரியா மற்றும் போன்ற நுண்கிருமிகளை அழிக்கும் திறன் அதிகம் இருக்கிறது இதனால் உடலில் நோய் தொற்றுக்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
- கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுத்தன்மையை நீக்கும்
- சருமத்தை பளபளப்பாக பேணவும்
- உதவும் உடல் எடையை குறைப்பதற்கு பெரும் உதவியாக இருக்கும்.
கண்ணை பாதுகாக்கும் வெள்ளரிக்காய் ஜுஸ்
வெள்ளரிக்காய் ஜுஸ் குடித்தால் கண்களில் இருக்கும் ஈரப்பதம் வரண்டு போகும் இதனால் உங்களுக்கு வயதானாலும் கண்பார்வை தெளிவாக தெரியும்.
இந்த வெள்ளரிக்காயில் இருக்கும் சத்துக்கள் கண்களின் கருவிழிகளின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
அந்தவகையில் கண்களுக்கு நன்மையை மட்டும் அளிக்கும் வெள்ளரிக்காய் ஜுஸ் செய்து குடித்தால் கண்களுக்கு இன்னும் ஆரோக்கியம்.
வெள்ளரிக்காய் ஒன்றை எடுத்து அதன் தோலை நீக்கி விட்டு இரண்டாக வெட்டி மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அரைத்து எடுத்தத்தில் சாற்றை மட்டும் தனியாக வடிகட்டிக் கொள்ளவும்.
பின்னர் தேவையான அளவு எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து குடித்தால் கண்களை பாதுகாக்கும் இயற்கையான வெள்ளரிக்காய் ஜுஸ் தயார்.