பேரழகில் ஜொலிக்க வெள்ளரிக்காய் ஜூஸ் போதும்... 5 நிமிடத்தில் தயாரித்து குடிங்க!
வெள்ளரிக்காயில் நிறைய நீர் உள்ளடங்கி இருப்பதோடு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த காபிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன.
வெள்ளரிக்காய் உட்கொள்வது சருமத்தை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவும்.
எண்ணெய் மற்றும் வறண்ட சருமத்திற்கு வெள்ளரி சிறந்த நிவாரணம் தரும்.
உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்ற துணைபுரியும்.
வெள்ளரிக்காய் பானம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
- வெள்ளரி - 1
- எலுமிச்சை பழம் - 2
- தண்ணீர் - 4 டம்ளர்
- புதினா இலைகள் - ஒரு கைப்பிடி
செய்முறை
வெள்ளரிக்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
அதேபோல் எலுமிச்சை பழத்தையும் நறுக்கிக் கொள்ளவும். கண்ணாடி ஜாரில் தண்ணீர் ஊற்றி அதில் வெள்ளரிக்காய், எலுமிச்சை பழ துண்டுகளை போடவும். புதினா இலைகளையும் தூவிக்கொள்ளவும்.
சிறிது நேரம் ஊறவைத்துவிட்டு அந்த நீரை பருகலாம்.
நாள் முழுவதும் இந்த நீரை பருகி வருவதன் மூலம் சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ளலாம். சரும அழகையும் மெருகேற்றி விடலாம்.
