ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வெள்ளரிக்காயில் பக்கவிளைவா? அதிர்ச்சி தகவல்
கோடை காலம் என்றதுமே சட்டென நம் நினைவில் வருவது வெள்ளரிக்காய் தான், இதில் 95 சதவிகிதம் நீர்ச்சத்து நிறைந்துள்ளது.
வெள்ளரிக்காயின் பயன்கள்
இதுதவிர வைட்டமின்-சி, கே, மக்னீசியம், காப்பர், பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
நம்முடைய உடலில் தேவையில்லாத நச்சுக்களை வெளியேற்றுவதுடன், வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது.
வயிற்றிலுள்ள கொழுப்பை கரைத்து எடையை குறைக்கிறது, வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துகிறது.
எனினும் இதை சாப்பிடும் போது நாம் செய்யும் தவறுகளால் பலன்கள் கிடைக்காமல் போகலாம், அது என்னவென்று தெரிந்து கொள்வோம்.
மறைந்த நடிகர் சண்முக சுந்தரம் கடைசி காலத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள்
வெள்ளரிக்காயின் பக்கவிளைவுகள்
மிக முக்கியமாக வெள்ளரிக்காய் சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கக்கூடாது, இதனால் சத்துக்கள் கிடைக்காமல் போவதுடன் செரிமான முறையை கடினமாக்குகிறது.
அதாவது வெள்ளரிக்காய் சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால், குடலில் உள்ள pHன் அளவு பலவீனமடைகிறது, மேலும் செரிமானத்திற்கு தேவையான அமிலம் போதுமான அளவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை.
இதனால் வயிற்றுப் போக்கு ஏற்படலாம், எனவே வெள்ளரிக்காய் சாப்பிட்டு அரை மணிநேரம் வரை தண்ணீர் குடிக்காமல் இருக்கவும். வெள்ளரிக்காய் மட்டுமின்றி நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி, அன்னாச்சி போன்ற பழங்களை சாப்பிடும் போதும் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும், பச்சைநிற காய்கறிகளை உட்கொண்டாலும் உடனடியாக தண்ணீர் குடிப்பதை தவிர்த்தல் நலம்.