யாரெல்லாம் இஞ்சியை தோலை நீக்கி விட்டு பயன்படுத்துகிறீர்கள்.... இனி இந்த பிழையை செய்யாதீர்கள்!
எம்மில் பலருக்கு இஞ்சி மிகவும் பிடிக்கும். காலையில் நாம் துகில் எழுந்தவுடன் அருந்தும் டீயில் இருந்து தான் அன்றைய நாள் அற்புதமாக ஆரம்பமாகின்றது.
இஞ்சியில் உள்ள ஆன்டி ஆன்பிளமேட்டரி பண்புகளினால் இது மிகுந்த அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுவாக இஞ்சியை நாம் பயன்படுத்தும் போது தோலை நீக்கி விட்டுதான் பயன்படுத்துகின்றோம்.
இது தவறு. இஞ்சியின் பலனை முழுமையாக பெற தோலை நீக்க கூடாது என ஹார்வர்ட் பல்கலைக்கழக நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.
இஞ்சித் தோலை நீக்காமல் பயன்படுத்தினால் மிகவும் நல்லது. இஞ்சியின் உள் பகுதியின் இருப்பதை விட, அதன் தோலில் இரண்டு மடங்கு அதிக பாலிஃபீனால்கள் உள்ளன.
அவை உங்களுக்கு ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும். குளிர்காலத்தில் நீங்கள் பல முறை இஞ்சி டீ குடிப்பீர்கள்.
தேநீரில் இஞ்சியை தோலை நீக்காமல் சேர்க்கவும். இதுவும் தோலின் பலனைத் தரும். தேநீர் முதல் பல உணவுகளில் இஞ்சி பயன்படுத்தப்படுகிறது.
இஞ்சியின் பயன்பாடு தேநீர் மற்றும் உணவுக்கு சுவையை மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இஞ்சியில் மருத்துவ குணங்கள் உள்ளன.
இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் வீக்கம் எதிர்ப்பு கலவைகள் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. எனவே இனி இஞ்சியை தோலுடன் பயன் படுத்தி நன்மைகளை பெற்றிடுங்கள்.
இஞ்சி டீ தயாரிப்பது எப்படி?
- 4-6 மெலிதான இஞ்சித் துண்டுகள்
- 1.5-2 கப் குடிநீர்
- சில துளிகள் எலுமிச்சை சாறு
- 1-2 தேக்கரண்டி தேன்
தயாரிப்பு
இஞ்சியை மெல்லிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். ஒன்றரை கப் அளவுள்ள நீரைக் கொதிக்க வைய்யுங்கள். அதில் இஞ்சித் துண்டுகளை சேர்க்கவும். 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடுங்கள்.
பின் அதனை வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு சிறிதளவு கலக்கவும் 1-2 தேக்கரண்டி தேனை சேர்த்து பருகவும்.
இது மிகவும் ருசியாக இருக்கும். பசியை நன்கு தூண்டும். உங்களுக்கு சில்லென ஐஸ் டீ குடிக்க வேண்டுமென்றால்,இந்த டீ யை 30 நிமிடங்களுக்கு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
இன்னும் சுவையான அரோமா கலந்த சுவை வேண்டுமென்றால், நீரில் இஞ்சியைக் கொதிக்க வைக்கும் போது, கூடவே பட்டை,புதினா தழையை போட வேண்டும்.
இதேவேளை, அளவுக்கு அதிகமாக இஞ்சி டீ குடிக்க கூடாது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று வேளைகள் மட்டுமே குடிக்க வேண்டும்.