வீடே மணமணக்கும் நாவூறும் சுவையில் தேங்காய் பால் ரசம் இனிமேல் இப்படி செய்ங்க
பொதுவாக ரசம் என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். வீட்டில் சைவ உணவு என்றால் கண்டிப்பாக அங்கு ரசம் என்பது கட்டாயம் இருக்கும்.
ரசத்தை பல வகையாக சமைத்து பார்த்திருப்போம். ஆனால் தேங்காய் பால் ரசம் எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தக்காளி - 2
- மிளகு - 1 டீஸ்பூன்
- சீரகம் - கால் டீஸ்பூன்
- பூண்டு - 6 பல்
- தேங்காய் பால் - 2 கப்
- புளி சாறு - அரை கப்
- கடுகு -கால் டீஸ்பூன்
- கறிவெப்பிலை - தேவைக்கு ஏற்ப
- வெங்காயம் - 1
- காஞ்ச மிளகாய் - 2
- உப்பு - ஒரு டீஸ்பூன்
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
- மஞ்சள் - கால் டீஸ்பூன்
- கொத்தமல்லி இலை - தேவைக்கு ஏற்ப
செய்யும் முறை
முதலில் தக்காளியை பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும். இதன் பின்னர் உரலில் மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை இடித்து தக்காளியுடன் சேர்க்க வேண்டும்.
இதன் பின்னர் தேங்காய் பால் எடுத்துக்கொள்ள வேண்டும். அதை தக்காளி கலவையுடன் சேர்க்க வேண்டும். இந்த கலவையை கைகளை கொண்டு பிசைந்து நன்றாக கலந்து விட வேண்டும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், காஞ்ச மிளகாய் போன்றவற்றை தாழிக்க வேண்டும்.
இதனுடன் உப்பு கொஞ்சம் மஞ்சள் சோத்துக்கொள்ள வேண்டும். பின்னர் தேங்காய் பால் கலவையை அதில் ஊற்ற வேண்டும்.
இது நன்றாக கொதித்து வந்தவுடன் கொத்தமல்லி இலைகளை நறுக்கி போட்டு இறக்கினால் தேங்காய் பால் ரசம் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |