குழந்தைகளுக்கு பிடித்த பன்னீர் கட்லெட் எப்படி செய்யலாம் தெரியுமா?
பன்னீர் என்றால் அனைவரும் வரும்பி சாப்பிடுவார்கள். பன்னீரை வைத்து ஏகப்பட்ட உணவுகளை செய்ய முடியும். அந்த வகையில் பன்னீரை வைத்து கட்லட் எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த உணவு வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்
- பன்னீர் - 2 கப்
- மசித்த உருளைக்கிழங்கு - 1 கப்
- பச்சை மிளகாய் - 3
- All Purpose மாவு - 6 டேபிள் ஸ்பூன்
- பிரட்தூள் - 2 கப்
- சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- கசூரி மேத்தி - 1 கைப்பிடி
- கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
- உப்பு - சுவைக்கேற்ப
செய்யும் முறை
முதலில் தேவையான அளவு பன்னீர் எடுத்து அதை துருவி ஒரு பாத்திரத்தில் எடத்து வைக்க வேண்டும். உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்து நன்றாக மசித்து துருவிய பன்னீரை எடுத்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் All Purpose மாவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா, எலுமிச்சை சாறு, நறுக்கிய கொத்தமல்லி இலை, சிறிதளவு உப்பு மற்றும் கசூரி மேத்தி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.
இதன் பின்னர் சிறிதளவு தண்ணீர் மற்றும் மீண்டும் 2 டேபிள் ஸ்பூன் All Purpose மாவு சேர்த்து நன்றாக கட்டிகள் இல்லாமல் கலந்துகொள்ளவும்.
பிசைந்த மாவிலிருந்து சிறிய அளவில் மாவு எடுத்து முதலில் அதை உருண்டைகளாக உருட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் அதை உள்ளங்கையில் வைத்து கட்லெட் வடிவில் தட்டவும்.
இரண்டு தனி தட்டுகளில் பிரட்தூள் மற்றும் All Purpose மாவை தனித்தனியாக எடுத்து வைக்க வேண்டும். இதன் பின்னர் அடுப்பல் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி தயார் செய்த கட்லட்டை பொரித்து எடுக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |