புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்கிறீங்களா? இந்த ஆபத்து நிச்சயம்
கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பெற இளைஞர்கள் புரதப்பவுடர் எடுத்துக்கொள்வதால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படுமா? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
புரதப்பவுடர்
புரோட்டீன் பவுடர்கள் முட்டை, பால் சார்ந்த பொருட்கள், சோயா பீன்ஸ், பட்டாணி, அரிசி ஆகியவற்றிலிருந்து புரோட்டீன்களை தனியாக பிரித்து அதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.
புரதப்பவுடர்களை அதிகமா உட்கொள்வதால் புரதச் சத்து அதிகமாகி எலும்பு தாது இழப்பு, சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை நோய் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
புரதத்தை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் சிறுநீரகத்தின் மூலம் கழிவுகளை வடிகட்டும் விகிதம் அதிகரிக்கும் . இதனால் உடலில் நோய்கள் அதிகரிப்பதற்கு இந்த புரதப் பவுடர் ஒரு காரணமாக அமைகிறது.
நமது உடலில் புரதம் தேவையாக இருந்தால் முட்டைகள்,லென்டில்கள், ,பீன்ஸ் உள்ளிட்டவைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். புரதச்சத்து அதிகமாக உடலில் இருந்தால் நீர்ச்சத்து குறைவாக காணப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |