கோடை காலத்தில் சருமத்தை பாதுகாக்கணுமா? தவறியும் இந்த நிற குடையை வாங்காதீங்க!
கோடைக்காலத்தின் கடும் வெயிலில் நடந்து செல்லும்போது பலரும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக கருப்புக் குடையை பெரும்பாலும் தெரிவு செய்கின்றார்கள்.
கருப்புக் குடை ஓரளவுக்கே சூரியனின் நேரடி வெப்பத்தைத் தடுக்கிறது என்றாலும் இது உடலுக்கு மறைமுகமாக கெடுதியே விளைகிறது என்பதே உண்மை.
கோடை காலம் ஆரம்பமாகி வெயில் சுட்டெரிக்கின்றது. எனவே, நம் உடல் ஆரோக்கியத்தை பாதுக்காக்க ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றுவது மற்றும் வெயிலுக்கு பொருத்தமான ஆடையை தெரிவு செய்வது போன்றே பொருத்தமான நிறத்தில் குடையை தெரிவு செய்ய வேண்டியதும் அவசியம்.
அற்த வகையில் கோடையில் கருப்பு குடை பயன்படுத்துவது சரியா? எந்த நிறம் பொருத்தமானது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எந்த நிறம் சிறந்தது?
வெயிலின் தாக்கத்திலிருந்து உடலை பாதுபாத்துக் கொள்ள இந்த கோடை காலத்தல் குடை பெரிதும் துணைப்புரிகின்றது.
கோடையில் கருப்பு கூடை பயன்படுத்தினால் ஓரளவுக்கு மட்டும் தான் சூரியனின் நேரடி வெப்பத்தைத் தடுக்கும்.
ஆனால் கருப்பு நிறம் வெப்பத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால் குடைக்குள் வெப்பம் அதிகமாகி சருமத்தை பாதிக்கும்.
'VIBGYOR' என்று அழைக்கப்படும் வைலட், இன்டிகோ, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு நிறங்களுமே இல்லாத ஒன்று தான் கருப்பு. கருப்பு நிறத்துக்கு வெப்பத்தை அதிக நேரம் தக்க வைத்துக்கொள்ளும் தன்மை இருக்கின்றது.
அதனால் தான் வெயிலில் கருப்பு நிற குடையை பயன்படுத்துபவருக்கு வியர்வை வெளியேறுவது அதிகமாக இருக்கின்றது.
கோடை காலத்தில் ஏற்படும் சரும வறட்சி மற்றும் சரும பாதிப்புக்களுக்களை கருப்பு குடை பாவிப்பது இன்னும் அதிகப்படுத்துவதற்கு வாய்ப்பு அதிகமாகவுள்ளது.
எனவே கோடை காலத்தில் வெள்ளை நிற குடையை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. வெள்ளை நிறம் ஒளிச்சிதறலை ஏற்படுத்தக்கூடியது.
வெள்ளை நிற குடையின் மீது படும் வெப்ப சூரிய ஒளிக் கதிர்களை தன்னிடம் வைக்காமல் திருப்பியனுப்பும் தன்மை வெள்ளை நிறத்துக்கு உண்டு.
எனவே தான், கோடை வெயில் காலத்தில் வெப்பத்திலிருந்து உங்களை தற்காத்துக்கொள்ள கருப்பு நிற குடைகளை விட, வெள்ளை நிறம் அல்லது ஏனைய வெளிர் வர்ண குடைகளை தெரிவு செய்வது சருமத்தை பாதுகாக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |