வெறும் வயிற்றில் பப்பாளி பழம் சாப்பிடுவது சரியானதா? மருத்துவ விளக்கம்
பப்பாளி பழம் பலராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. இந்த பழம் பொதுவாக இனிப்பாகவும் நீர்ச்சத்து நிரம்பியதாகவும் காணப்படுகிறது.
இது பல்வேறு ஊட்டச்சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. புரதங்களை உடைப்பதற்கு உதவும் செரிமான நொதிகள் பப்பாளி பழத்தில் காணப்படுவதால் இது செரிமானத்தை சிறந்த முறையில் ஊக்குவிக்கிறது.
இந்த பழத்தை வெறுவயிற்றில் சாப்பிடுவதால் உடலில் நன்மை கிடைக்குமா? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பப்பாளி
நாம் பப்பாளி பழத்தை வெறுவயிற்றில் சாப்பிட்டால் பழத்தில் உள்ள சத்துக்கள் விரைவாக உறிஞ்சப்பட்டு நமது உடலில் இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டு வரும்.
நம் உடலை தாக்கும் நோய்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதற்கு உடலுக்கு உதவுவதன் மூலமாக நமது ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதுகாப்பாக இருக்கும்.
இதில் அதிக நார்ச்சத்து உள்ளதால் வெறுவயிற்றில் உண்ணும் போது வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்தும் இதனால் நாம் உண்ணும் உணவின் அளவு குறையும்.
இதன் காரணமாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பப்பாளி பழம் ஒரு சிறந்த பழமாக காணப்படுகிறது.
பப்பாளி பழத்தில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஆன்டி ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் இருப்பதால் நமது சருமத்தை பொலிவாகவும், இளமையாகவும் காட்சியளிக்க செய்கிறது.
சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும் போது அழகும் அதிகரிக்கும். வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது உடலின் இயற்கையான நச்சு நீக்க செயல்முறை தூண்டப்பட்டு இதய நோய்களுக்கு காரணமான உடலில் உள்ள நச்சுகள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்கள் அனைத்தும் வெளியேற்றப்படுகிறது.
இந்த பழம் கண்களின் ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த கவசமாகும். எனவே பப்பாளி பழத்தை பயமின்றி வெறுவயிற்றில் சாப்பிடலாம். அது முழுக்க முழுக்க பலன் தரும்.