கெட்ட கொலஸ்ட்ரோலை விரட்டி உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் பானங்கள்
இன்றைய காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை நோய்க்கு பாதிக்கப்படுவது அறிதே. தற்போது கொலஸ்ட்ரால் நோயானது வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான்.
நாம் கடைகளில் விரும்பி சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் அதிக கொழுப்புகள் இருக்கத்தான் செய்கிறது. இவ்வாறு கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இந்த உணவுகளை சாப்பிட வேண்டும், இந்த உணவுகளை சாப்பிடக் கூடாது என்று ஒரு கட்டுப்பாடு இருக்கிறது.
அப்படி இருப்பவர்களுக்கு உணவுக்கு பதிலாக இந்த பானங்களைக் குடிக்கலாம் அப்படி குடித்தால் உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் வெளியேறும்.
குடிக்க வேண்டிய பானங்கள்
1. கொலஸ்ட்ரோல் அளவைக் குறைப்பதற்கு ஸ்ட்ராபெர்ரி, அவுரிநெல்லிகள், ப்ளாக்பெர்ரிகள் அல்லது ராஸ்பெர்ரி போன்ற பெர்ரி பழங்களுடன் தயிர் சேர்த்து அரைத்து குடிக்கலாம்.
2.கொலஸ்ட்ரோல் அதிகமாக இருந்தால் பால் குடித்தால் கொலஸ்ட்ரோல் அளவு குறையும்.
3. கொழுப்பின் அளவைக் குறைப்பதற்கு வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடிக்கலாம்.
4. கொழுப்பின் அளவைக் குறைக்கவும் கட்டுக்குள் வைக்கவும் பாலுக்கு பதிலாக சோயாபால் குடிக்கலாம்.
5. ஓட்ஸ் பானங்களும் குடிக்கலாம் இது கொழுப்பின் அளவைக் குறைக்கும்.
6. தக்காளி ஜுஸ் குடித்தால் லைகோபி செறி மேம்படும். மேலும், கொலஸ்ட்ரோலைக் குறைக்கும் நியாசின் மற்றும் நார்ச்சத்துக்களும் தக்காளி ஜுஸ்ஸில் உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |