மூன்றே மாதங்களில் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கனுமா? அப்போ இந்த அற்புத தேநீரை குடிங்க போதும்!
Cholestrol
Weight Loss
By Kishanthini
கொய்யா பழத்தின் இலை, கனி, பட்டை என்று அதனுடைய அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது.
கொய்யா இலையில் புரதம், விட்டமின்கள் பி6, கோலைன், விட்டமின் சி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி போன்ற அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது.
இதில் டீபோட்டு குடிப்பது உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழகின்றது. குறிப்பாக கெட்ட கொழுப்பை குறைக்கின்றது.
அந்தவகையில் இந்த டீயை எப்படி தயாரிக்கலாம் எ்ன்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- கொய்யா இலை - 5
- டீத்தூள் - அரை டீஸ்பூன்
- தண்ணீர் - 2 கப்
- ஏலக்காய் - 2
- நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி - தேவையான அளவு.
செய்முறை
- பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் எடுத்து கொண்டு அதை கொதிக்க விடுங்கள்.
-
கொதித்து வரும் போது அதில் சிறிதளவு டீத்தூள் மற்றும் எடுத்து வைத்துள்ள கொய்யா இலை போட்டு அதன் பின் ஏலக்காய் சேர்த்து மிதமான தீயில் நன்றாக கொதிக்க விடுங்கள்.
-
நன்றாக கொதித்து இலையின் சாறு இறங்கியதும் நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி ஏதாவது ஒன்று சேர்த்து கலந்து வடிகட்டி பருகலாம்.
- இதை மூன்று மாதங்கள் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் குறையும்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US