கெட்ட கொழுப்பு கடகடவென குறைய வேண்டுமா? உப்பு போட்டு டீ குடிங்க
உடம்பில் கெட்ட கொழுப்புகள் குறைய வேண்டும் என்றால் தினமும் உப்பு போட்டு டீ குடிக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.
டீ-யில் உப்பு
இன்று மக்கள் அனைவரும் டீயில் இனிப்பு போட்டு தான் பருகிவருகின்றனர். இதில் உப்பு போட்டு குடிப்பது என்றால் முகம்சுழிக்கவே செய்வார்கள். ஆனால் உங்களது விருப்பத்தினை தெரிவு செய்யாமல், ஆரோக்கியத்தினை பற்றி கட்டாயம் நீங்கள் சிந்திக்க வேண்டும்.
ஆம், சில வகையான தேநீரில் கருப்பு உப்பை சேர்த்து குடிக்கும் போது, அது வயிற்றின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது. அந்த வகையில் எந்த எந்த டீயில் உப்பு போட்டு குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
கிரீன் டீ
உடல் எடையைக் குறைப்பதற்கு பலரும் பயன்படுத்தும் கிரீன் டீயுடன் கருப்பு உப்பை கலந்து குடித்தால், செரிமான பிரச்சினை மற்றும் அஜீரணம், அமிலத்தன்மை ஆகிய வயிற்று பிரச்சினைகள் குறையும்.
லெமன் டீ
இதே போன்று லெமன் டீயில் கருப்பு உப்பு கலந்து குடித்தால் மலச்சிக்கல் பிரச்சினை நீங்குவதுடன், வயிற்றின் வளர்சிதை மாற்ற விகிதத்தையும் அதிகரிக்கின்றது. உடம்பில் உள்ள நச்சுக்கள் நீங்குவதோடு, வேகமாக ஜீரணிக்கவும் செய்யும் ஆற்றல் குடலுக்கு கிடைக்கின்றது.
பிளாக் டீ
கருப்பு உப்பின் சிறப்பே வயில் செரிமான நொதிகளை ஊக்குவிப்பது தான். ஆதலால் பிளாக் டீ-யில் கருப்பு உப்பு கலந்து குடித்தால் எடை இழப்பை ஏற்படுத்துவதுடன், கெட்ட கொழுப்பையும் குறைக்கின்றது.