ஷர்மிகாவை நான் விமர்சித்த போது.. கொதித்த சின்மயி! என்ன சொல்லியிருக்கிறார்?
அறிவியலுக்கும், மருத்துவத்துக்கும் எதிராக வாய்க்கு வந்தபடி பேசுகிறார் என பல விமர்சனங்களை சந்தித்து வருகிறார் டாக்டர் ஷர்மிகா சரண்.
சித்த மருத்துவரான இவர், பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவரான டெய்ஸியின் மகள்.
தொடக்கத்தில் வீட்டிலேயே எளிதில் குணமாகக்கூடிய மருத்துவ குறிப்புகளை வழங்கி பிரபலமானார் ஷர்மிகா சரண்.
அடுத்தடுத்து யூடியூப் வீடியோக்கள், நேர்காணல்கள் என பிரபல்யமாக மருத்துவத்திற்கு, அறிவியலுக்கு புறம்பாக பேசிவருகிறார் என ட்ரோல் செய்யப்பட்டார்.
காரணம் ஒரு குலோப்ஜாமூன் சாப்பிட்டால் 3 கிலோ எடை அதிகரிக்கும், குப்புறப்படுத்தால் மார்பக புற்றுநோய் வரலாம், நல்லவர்களுக்கு கடவுளின் அருள் இருந்தால் குழந்தை பிறக்கும், நம்மைவிட பெரிய மிருகமான மாட்டை சாப்பிடக்கூடாது என்றெல்லாம் இவர் பேச ட்ரோல் வீடியோக்கள் அதிகரிக்கத் தொடங்கின.
இந்நிலையில் இவர் தொடக்கத்தில் வீடியோ பேசிய போதே, அதை விமர்சித்து பதிவிட்டவர் சின்மயி.
இதுகுறித்து அவர் தற்போது பேசுகையில், கொஞ்ச நாளைக்கு முன்னாடி நான் ஒரு ரியாக்ஷன் வீடியோ அப்லோட் பண்ணி இருந்தேன்.
“நமது தோலே பெரிய வாய். அதில் கெமிக்கல்களை போடக்கூடாது, ஷாம்பூ போடக்கூடாது ரத்தத்தில் கலந்துவிடும்” என ஷர்மிகா பேசியிருந்தார்.
அவரை அப்போது நான் விமர்சித்தபோது என்னை மிக மோசமான விமர்சித்தார்கள். ஆனால் இப்போது பலரும் அவரது வீடியோக்களை எடுத்து பகிர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
நான் அவரை (ஷர்மிகாவை) விமர்சித்தபோது நான் ஏதோ பாவம் செய்தது போல் என்னைத் திட்டனார்கள்.
நான் சமீபத்தில் ஷர்மிகாவின் மற்றொரு வீடியோவைப் பார்த்தேன். ”நீங்கள் நல்லவரா இருந்தால் குழந்தை பிறக்கும், கெட்டவரா இருந்தால் பிறக்காது” எனப் பேசியுள்ளார்.
எனக்கு தெரிஞ்சு பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர், ரேப்பிஸ்ட், குழந்தைகளை பாலியல் வன்முறை செயதவர்களுக்கு எல்லாம் குழந்தை பிறக்கிறது.
இதில் வியப்பு என்னவென்றால், என்னை அப்போது மோசமாக விமர்சித்து விட்டு தற்போது இப்போது ஷர்மிகாவை பல யூட்யூப் சானல்கள் சுட்டிக்காட்டுகிறேன் என போட்டிபோட்டு விமர்சித்து வருகிறார்கள்” என சின்மயி தெரிவித்துள்ளார்.