எவ்வளவு சூடுபடுத்தினாலும் உருகாத ஐஸ்கிரீமை தயாரித்த நிறுவனம் - குதூகலத்தில் ஐஸ் பிரியர்கள்;
ஐஸ்கிரீம் என்றால் பலருக்கும் அதீத பிரியம் இருக்கும். ஆனால், அந்த ஐஸ்கிரீமை உருகி முடிப்பதற்குள் சாப்பிடுவது தான் மிகப்பெரிய டாஸ்க் ஆன ஒன்று.
ஐஸ்கிரீம் என்றாலே, சில நிமிடங்களில் உருகி விடும் என்பது தான் ஒரு விதி போல உள்ளது. அப்படி இருக்கும் நிலையில் சீனாவில் நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ள ஐஸ்கிரீம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

உருகாத ஐஸ்கிரீம்
சீனாவின் பீஜிங் நகரத்தை சேர்ந்த சைய்ஸ்கிரீம் (Chicecream) என்ற நிறுவனம், மிக வித்தியாசமான ஒரு ஐஸ்கிரீமை தயாரித்துள்ளது. அவர்கள் தயாரித்துள்ள அந்த ஐஸ்கிரீமில் நெருப்பால் ஒரு நபர் சுடவே அந்த ஐஸ்கிரீம் ஒரு சொட்டு கூட உருகாமல் அப்படியே இருக்கிறது.
31 டிகிரி செல்சியஸால் கூட அந்த ஐஸ்கிரீமை உருக வைக்க முடியவில்லை. இது சம்பந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இயற்கை முறையில் உருவாக்கப்பட்டது
பலரும் இதற்கு ஐஸ்கிரீம் உருகவில்லை என்றால், அதில் நிச்சயம் ஏதாவது ரசாயனங்கள் கலக்கப்பட்டு இருக்கும் என தெரிவிக்க அதற்கு அந்த ஐஸ்கிரீம் நிறுவனம் தக்க விளக்கத்தை அளித்துள்ளது.
எங்களின் ஐஸ்கிரீமில் சேர்க்கப்பட்டிருக்கும் மூலப்பொருட்கள் அனைத்தும் சீனாவின் தேசிய உணவு பாதுகாப்பு விதிவிலக்கிற்கு உட்பட்டவை தான்.

ஐஸ்கிரீம் உருகவில்லை என்றால் ரசாயனம் சேர்க்கப்பட்டிருக்கும் என்ற அச்சம் மக்களுக்கு தேவை இல்லை, இயற்கையான பொருட்களை கொண்டு பாதுகாப்பான ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஐஸ்கிரீனை ருசி பார்க்க மக்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இனிமேல் இது போன்ற ஐஸ்கிரீம்கள் பல இடங்களில் உருவாகும் என்றும் கூறி வருகிறார்கள்.