ஐஸ்கிரீம் எப்படி சாப்பிட வேண்டும்? யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
இன்று வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் விரும்பி உண்ணும் உணவு பண்டத்தில் ஐஸ்கிரீம் ஒன்றாகும்.
இவ்வாறு பலருக்கும் பிடித்தமான இதனை யார் சாப்பிடலாம்? எப்படி சாப்பிட வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஐஸ்கிரீமை யார் சாப்பிடலாம்?
எந்தவித உடல்நலப் பிரச்சினையுமில்லாத குழந்தைகள், இளைஞர்கள் மற்றம் நடுத்தர வயதைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொள்ளலாம்.
முழு கொழுப்பச் சத்து நிறைந்த பால் தான் ஐஸ்கிரீம் தயாரிப்பிற்கு அடிப்படி. இந்தக் கொழுப்புச் சத்து இதயத் தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தலாம். முதியோர், ரத்த அழுத்தம், இதயப் பிரச்சினை உள்ளவர்கள் ஐஸ்கிரீமை முடிந்தவரைத் தவிர்த்துவிட வேண்டும்.
ஐஸ்கிரீமிலுள்ள முழு கொழுப்புச்சத்தால், குழந்தைகளின் உடலில் வளர்சிதை மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும். இதனால் பெண் குழந்தைகள, விரைவில் பூப்பெய்துவிடும் சூழல்கூட ஏற்படலாம்.
சிலருக்கு ஃபளேவர்ட் ஐஸ்கிரீம்களில் சேர்க்கப்படும் செயற்கை நிறமிகளால் பிரச்சினை ஏற்படக்கூடும்.
இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: முதலீடு செய்ய சரியான நேரமாம்
ஐஸ்கிரீம் எப்படி சாப்பிட வேண்டும்?
ஐஸ்கிரீமை உட்கொள்ளும் போது, உடல் சட்டென குளிர்ந்த நிலைக்குச் செல்லம். இது உடலின் வெப்பநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும். இதனை சமன்செய்ய, ஐஸ்கிரீம் சாப்பிட்ட உடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
மழைக்காலங்களில் நீர் வழி நோய்கள் அதிகம் பரவுவதுடன், உடலின் வெப்பநிலையின் அளவும் சமநிலையில் இல்லாமல் இருப்பதுடன், தொற்றுநோய்களின் தாக்கமும் அதிகமாகவே இருக்கும். எனவே மழைக்காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.
வெயில் காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதில் தடையேதும் இல்லை. ஆனால் அளவோடு சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொண்டாலே போதும்.
நிறத்தால் நிராகரிக்கப்பட்ட பிரபல நடிகை! அடையாளம் தெரியாமல் ஸ்டைலாக மாறிய புகைப்படம்