சிக்கன் ஈரல் Vs ஆட்டு ஈரல்; இப்படி குழம்பு செய்ங்க.. மிச்சமே இருக்காது
அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
அதிக மக்களால் விரும்பி உண்ணக்கூடிய இறைச்சி என்றால் அது மட்டன் மற்றும் சிக்கன் தான். இதில் மட்டன் விலை அதிகமாக இருப்பதால் பலர் சிக்கனை தான் அடிக்கடி வாங்கி சாப்பிடுகிறார்கள்.
கடைகளில் சிக்கன் வாங்கும் பொழுது அதன் ஈரல் சாப்பிடுவது வழக்கம். ஆனால் பெரியளவு இல்லாமல் ஒரு கோழியின் ஈரல் மாத்திரம் வாங்கி சாப்பிடுவார்கள்.
சிக்கன் ஈரலை விட மட்டன் ஈரலில் அதிகமான ஊட்டசத்துக்கள் இருப்பதாக செய்திகள் வைரலாக பேசப்படுகிறது. இது குறித்து பலருக்கும் சந்தேகம் இருக்கும்.
அந்த வகையில், சிக்கன் ஈரல் மற்றும் மட்டன் ஈரல் இரண்டில் எது சிறந்தது என்பதற்கு மருத்துவர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து தெரிந்து கொள்வோம்.
மட்டன் ஈரல் Vs சிக்கன் ஈரல்
அதாவது, மட்டன் ஈரல் Vs சிக்கன் ஈரல் இரண்டில் 100 கிராம் மட்டன் ஈரல் மற்றும் சிக்கன் ஈரலில் சுமார் 160-170 கலோரிகளும், 20-25 கிராம் புரோட்டீனும், 5 கிராம் கொழுப்பும் உள்ளது. அத்துடன் கொலஸ்ட்ரால் மட்டன், சிக்கன் என இரண்டிலும் 400-500 மிகி உள்ளது.
மேலும், வைட்டமின் பி12 என்று பார்த்தால் மட்டன் ஈரலில் 85 மிகி/100கி, சிக்கன் ஈரலில் 16 மிகி/100கி உள்ளது. அதே சமயம், ஒரு நாளைக்கு வேண்டிய 5000 யூனிட் வைட்டமின் ஏ சத்தில், 100 கிராம் மட்டன் ஈரலில் 6000 யூனிட்டும், சிக்கன் ஈரலில் சுமார் 16000 யூனிட் வைட்டமின் ஏவும் உள்ளது.
கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாக வைட்டமின் ஏ சிக்கன் ஈரலில் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருவர் அளவுக்கு அதிகமாக வைட்டமின் ஏ எடுத்து கொண்டால் அதன் விளைவாக ஹைப்பர்வைட்டமினோசிஸ் ஏ எனப்படும் மூளை தொடர்பான பாதிப்புகள் அல்லது கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது.
தேவையான பொருட்கள்
- எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
- மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
- சீரகம் மற்றும் சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
- கசகசா - 1/2 டீஸ்பூன்
- கொத்தமல்லித்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கைப்பிடி
- சிவப்பு மிளகாய் - 2 தக்காளி
- கூழ் - 1/2 கப்
- இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
- வெங்காயம் - 2 மட்டன்
- லிவர் - 400 கிராம்
- மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் - 1/2 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
மட்டன் ஈரல் குழம்பு வைப்பது படிமுறை
முதலில் 400 கிராம் அளவிலான மட்டன் ஈரல் எடுத்து, அதை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர், ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், மிளகு, காய்ந்த மிளகாய், கசகசா, கொத்தமல்லி, சீரகம், கறிவேப்பிலை, சோம்பு போன்றவற்றைச் சேர்த்து வதக்கவும். இவை அனைத்தையும் ஆறவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
அடுத்து, மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து மூன்று தேக்கரண்டி எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது இரண்டையும் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
தக்காளி விழுது சேர்த்து கிளறி விட்டு, எண்ணெய் தனியாக பிரிந்து வரும் பொழுது மட்டன் துண்டுகளை போட்டு கிளறி விடவும். அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து, மசாலா விழுதும் கலந்து கொள்ளவும்.
அதன் பின்னர் கரம் மசாலா, மிளகாய் தூள் கலந்து குறைந்த தீயில் மூடி வேக வைக்கவும். அரை மணி நேரம் அப்படிய வைத்து, கால்கிளாஸ் அளவு தண்ணீர் சேர்த்து மூடியை மூடி வைக்கலாம்.
சுமாராக 20 நிமிடங்களுக்குப் பிறகு மட்டன் ஈரல் வேக வைக்கப்பட்டிருந்தால், அடுப்பை அணைத்து விடலாம். கடைசியாக கொத்தமல்லி இலைகளைத் தூவி விடலாம். இப்போது சுவையான மட்டன் ஈரல் குழம்பு தயார!
முக்கிய குறிப்பு
சிக்கன் ஈரலில் மட்டன் ஈரலை விட அதிகமான வைட்டமின் ஏ இருப்பதால் சிக்கன் ஈரல் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |