இந்தியாவில் அதிக கோடீஸ்வரர்கள் உள்ள டாப் 7 நகரங்கள்! சென்னைக்கு எந்த இடம்னு தெரியுமா?
தற்போதைய அறிக்கைகளில் வெளியாகியுள்ள புள்ளிவிபரங்களின் அடிப்படையில், இந்திய நாட்டில் அதிக கோடீஸ்வரர்கள் வாழும் நகரங்களின் டாப் 7 நகரங்கள் குறித்த பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
தரவுகளின் அடிப்படையில், கிட்டதட்ட இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு கோடீஸ்வர குடும்பங்கள் வாழும் நகரமாக அறியப்படும் மும்மை தான் இந்த பட்டியலில் முதலிடம் வகிக்கின்றது.

மேலும், இந்த பட்டியலில் சென்னையும் இடம்பெற்றுள்ளது. இது குறித்து வரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிக கோடீஸ்வரர்கள் உள்ள நகரங்கள்
புனே: புள்ளிவிபரங்களின் அடிப்படையில், இந்தியாவில் அதிக கோடீஸ்வரர்கள் வாழும் நகரங்களில் புனேவுக்கு7வது இடம் கொடுக்கப்படுகின்றது. மகராஷ்டிராவில் உள்ள இந்த நகரில் 22,500 கோடீஸ்வரர்கள் வாழ்கிகின்றார்கள்.
சென்னை: அடுத்தப்படியாக இந்தியாவில் அதிக கோடீஸ்வரர்கள் வாழும் நகரங்கள் பட்டியலில் சென்னை 6வது இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் சுமார் 22,800 கோடீஸ்வரர்கள் வாழ்கின்றார்கள்.

கொல்கத்தா: இந்தியாவில் அதிக கோடீஸ்வரர்கள் வாழும் நகரங்களின் டாப் 7 பட்டியலில், கொல்கத்தா 5வது இடத்தில் காணப்படுகின்றது. மேற்கு வங்கத்தின் தலைநகரமான கொல்கத்தாவில் சுமார் 26,600 கோடீஸ்வரர்கள் இருக்கின்றார்களாம்.
அகமதாபாத்: இந்த பட்டியலில் அகமதாபாத் 4வது இடத்தை பிடித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் இருக்கும் அகமதாபாத்தில் சுமார் 26,800 கோடீஸ்வரர்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெங்களூரு: பெங்களூரு இந்த பட்டியில் 3வது இடத்தை பிடித்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களூருவில் சுமார் 31,600 கோடீஸ்வரர்கள் இருக்கின்றார்களாம்.

டெல்லி: இந்தியாவில் அதிக கோடீஸ்வரர்கள் வாழும் நகரங்களின் பட்டியலில் டெல்லிக்கு 2வது இடம். இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் சுமார் 68,200 கோடீஸ்வரர்கள் இருக்கின்றார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
மும்பை: இந்த பட்டியெலில் மும்பை தான் முதல் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா தலைநகரமான மும்பை சுமார் 1,42,000 கோடீஸ்வரர்கள் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |