chicken curry: சிக்கன் குழம்பை இப்படி ஒருமுறை செய்து பாருங்க... சுவை அள்ளும்
பொதுவாககேவே சிக்கன் குழம்பு அனைவருக்கும் பிடிக்கும். சிக்கன் குழம்பை பல வகைகளில் சமைக்கலாம் என்பதுடன் இது எல்லா வகையான உணவுகளுடனும் சூப்பராக பொருந்துவது இதன் சிறப்பம்சமாகும்.
அந்த வகையில் அனைவரும் விரும்பும் படி காரசாரமான சிக்கன் கிரேவியை எளிமையான முயைில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வறுத்து அரைக்க தேவையானவை
கல்பாசி - 2
பிரிஞ்சு இலை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
அன்னாசி பூ - 1
மராதிமொக்கு - 1
பட்டை - 1 துண்டு
சீரகம் - 1 தே.கரண்டி
தனியா - 2 தே.கரண்டி
சோம்பு - 1/2 தே.கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
கருவேப்பிலை - சிறிதளவு
துருவிய தேங்காய் - 1 கப்
குழம்பு வைக்க தேவையானவை
கோழி - 250 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 2
எண்ணெய் - 2 தே.கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
புளிக்காத தயிர் - 2 தே.கரண்டி
கருவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக அதில் போட்டு எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே போன்று தேங்காய் துருவலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து அதை பேஸ்டாக அரைத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் மைவத்து எண்ணெய் ஊற்றி, அரைத்த பொடியை சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.
அத்துடன் கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து, வெங்காயம் பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனையும் அதனுடன் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு போதுமான தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிட்டு, குழம்பு வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து 5 நிமிடங்கள் வரையில் நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கினால், அவ்வளவுதான் அருமையான சுவையில் சிக்கன் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |