vegetable bread cutlet: வீட்டில் பிரட் இருக்கா? இந்த மொறு மொறு கட்லட் செய்து அசத்துங்க
பொதுவாகவே மாலை வேளையில் தேனீர் குடிக்க ஏதாவது நொறுக்கு பண்டங்கள் செய்ய சொல்லி வீட்டில் உள்ள சிறுவர்கள் தினமும் தொல்லை கொடுப்பது வழக்கம்.
அப்படியான நேரங்களில் கடைகளில் ஸ்நாக்ஸ் வாங்கி கொடுப்பது குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
ஆரோக்கியமான முறையில் மிகவும் எளிமையாக வீட்டிலேயே பிரட்டை வைத்து காய்கறிகள் கலந்து எவ்வாறு மொறு மொறுன்னு அசத்தல் சுவையில் கட்லட் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பிரட் - 5 துண்டுகள்
ரவை - 2 மேசைக்கரண்டி
கடலை மாவு - 2 மேசைக்கரண்டி
உப்பு - 1/2 தே.கரண்டி
சீரகத் தூள் - 1/2 தே.கரண்டி
கரம் மசாலா - 1/2 தே.கரண்டி
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - சிறிது (துருவியது)
குடைமிளகாய் - 1/2 (பொடியாக நறுக்கியது)
முட்டைக்கோஸ் - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
கேரட் - 1 (துருவியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் பிரட் துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டு நன்றாக பொடித்து ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அத்துடன் ரவை, கடலை மாவு மற்றும் தேவையானளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து சீரகத் தூள், கரம் மசாலா, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், குடைமிளகாய், முட்டைக்கோஸ் கொத்தமல்லி ஆகிய அனைத்தையும் போட்டு கலந்துவிட வேண்டும்.
பின்னர் அதனுடன் துருவிய இஞ்சி, கேரட் ஆகியவற்றை சேர்த்து நீர் ஊற்றாமல் கைகளால் நன்றாக பிசைந்து 20 நிடங்கள் வரையில் நன்றாக ஊறவிட வேண்டும்.
அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தட்டையாக கட்லெட் போன்று தட்டிக் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அகலமான தவாவை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் அவ்வளவு தான் சுவையான வெஜிடேபிள் பிரட் கட்லெட் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |