20 வயதிலேயே இப்படியா! ரசிகர்களை கிறங்கடிக்கும் சாரா அர்ஜூனின் புதிய காணொளி
நடிகை சாரா அர்ஜூன் செம ட்ரெண்டிங்கான உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
நடிகை சாரா அர்ஜூன்20
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக அசத்தி வருபவர் தான் நடிகை சாரா அர்ஜுன்.

2011 ஆம் ஆண்டு சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த “தெய்வத்திருமகள்” திரைப்படத்தில் நிலா என்ற கதாப்பாத்திரத்தில் தனது தத்ரூபமான மற்றும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.
அதனைத் தொடர்ந்து பேபி சாரா என அழைக்கப்பட்டு, தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்த நிலையில், சைவம், விழித்திரு ஆகிய படங்களில் நடித்தார்.

அதனை தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளிக்குப் பின்னர் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நந்தினியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார்.

அதனை தொடர்ந்து ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான “துரந்தர்” என்ற பாலிவுட் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.இந்த படத்தில் இவர்களின் வயது வித்தியாசம் இணையத்தில் பேசுபொருளானமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், படு கிளாமரான லுக்கில் சாரா அர்ஜூன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளி அசுர வேகத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |