Best diet recipe: குண்டாக இருக்கவங்க ஒல்லியாக மாறணுமா? காலையில் இத கட்டாயம் சாப்பிடுங்க
தற்காலத்தில் அதிகரித்துவரும் வேலைபளு, மன அழுத்தம், ஒரே இடத்தில் அமர்ந்தப்படி மணிக்கணக்கில் வேலை செய்வது, துரித உணவுகளின் நுகர்வு அதிகரித்தமை,போதிய உடற்பயிற்சியின்மை, வாழ்க்கை முறை மாற்றங்கள் என பல்வேறு காரணிகள் உடல் பருமன் அதிகரிப்பதில் தாக்கம் செலுத்துகின்றது.
பல்வேறு நோய்களுக்கும் அடிப்படையாக திகழும் உடல் பருமன் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் முதலில் மாற்ற வேண்டியது உணவு முறையை தான்.

அப்படி உடல் எடையை குறைக்க வேண்டும் என டயட்டில் இருப்பவர்களுக்கு சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த சோயா சங்ஸ் சாலட் எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சோயா சங்ஸ் (மீல் மேக்கர்) - ஒரு கப்
தேங்காய் எண்ணெய் - 1 தே.கரண்டி
மிளகாய் தூள் 1 தே.கரண்டி
மஞ்சள் தூள்- 1/2 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
சாலட் தயாரிக்க
தயிர்- ஒரு கப்
மிளகாய் தூள் 1/2 தே.கரண்டி
மிளகு தூள் 1/2 தே.கரண்டி
கரம் மசாலா- 1 /2 தே.கரண்டி
உப்பு- தேவையான அளவு
வெங்காயம்- 1 (பொடியாக நறுக்கியது)
சிறிய கெரட்- 1 (துருவியது)
சிறிய வெள்ளரிக்காய் - 1 (துருவியது)
கொத்தமல்லி- பொடியாக நறுக்கியது

செய்முறை
முதலில் ஒரு கப் சோயா சங்ஸ் செந்நீரில் ஊறவைத்து, நன்றாக பிழிந்த ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து, பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தேங்காய் எண்ணெய், மிளகாய் தூள் ,மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட்ட பின்னர் அடுப்பை ஆன் செய்து, சோயா சங்ஸையும் சேர்த்து நன்றாக ரோஸ்ட் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கப் தயிரில் மிளகாய் தூள் 1 தே.கரண்டி,மிளகு தூள் ,கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பெரிய கிண்ணத்தை எடுத்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், கெரட் வெள்ளரிக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு, கலந்து வைத்த தயிர் மற்றும் ஏற்கனவே தயார் செய்து வைத்த சோயா சங்ஸ் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்த நன்றாக கலந்துவிட்டு, கொத்தமல்லி இலையை தூவினால் அவ்வளவு தான் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த சூப்பரான வெயிட் லாஸ் சோயா சங்ஸ் சாலட் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |