தங்கம் பற்றிய இந்த வியப்பூட்டும் உண்மைகள் உங்களுக்கு தெரியுமா?
பொதுவாகவே தொன்று தொட்டு புலக்கத்தில் இருக்கும் ஒரு மதிப்பும், மரியாமைதயும் மிக்க உலோகம் என்றால் அது நிச்சயம் தங்கம் தான்.
தங்கம் ஆபரணங்கள் செய்வதற்காக மாத்திரமன்றி உலக பொருளாதாரத்தை நிர்ணயிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. தங்கத்தை பற்றி அறியாதவர்கள் இருக்கவே முடியாது என்றால் மிகையாகாது.

ஆனால் தங்கம் பற்றி சில முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான உண்மைகள் குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்காது. அப்படி பலரும் அறிந்திராத தங்கம் பற்றி சில சுவாரஸ்யமாக விடயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
தங்கம் குறித்த இந்த விடயம் தெரியுமா?
தங்கம் பூமியில் இருந்து பெறப்பட்டாலும் இது பூமியில் உருவானது கிடையாது. பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் விண்வெளி கற்கள் மூலமாகவே தங்கம் பூமிக்கு வந்துள்ளது.இது மெய்யாகவே ஒரு விண்வெளி புதையல் தான்.

உலகின் பெருங்கடல்களில் சுமார் 10 பில்லியன் டன் தங்கம் கரைந்துள்ளது. சாதாரண கடல் நீரில் தங்கம் சிறிய ஆனால் கணிசமான அளவில் காணப்படுகிறது.
அதைத் திறமையாக வடிகட்ட முடிந்தால், ஒரு மைல் பக்க அளவுள்ள ஒரு கனசதுர கடல் நீரிலிருந்து 20 டன் தங்கத்தை மீட்டெடுக்க முடியும்.
இதுவரையில், மனிதர்கள் தோண்டி எடுத்ததை விட அதிக தங்கம் பெருங்கடல்களில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அதனை பிரித்தெடுபதற்கான செலவு அந்த தங்கத்தின் பெருமதியை விட அதிகம் என்பதால் தான் அதனை கடலிலேயே விட்டுவைத்திருக்கின்றார்கள்.

தங்கம் ஒருபோதும், மங்குவதும் கிடையார், துருப்பிடிப்பதும் கிடையாது, காற்றுடன் தாக்கமடைவதும் கிடையாது என்பதால், இதுவரையில் மனிதர்கள் பயன்படுத்திய தங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வடிவத்தில் பூமியில் இருந்துக்கொண்டு தான் இருக்கின்றது.
வைரம் தங்கத்தை விட அதிக விலை மதிப்பு கொண்டதாக இருந்தாலும் தங்கம் தான் அரிதான உலோகமாக அறியப்படுகின்றது.
99.99% தூய்மையான தங்கத்தை கையால் எளிதாக வளைத்து உருமாற்ற முடியும். இதனால்தான், அதிக அளவிலான தூய்மையான தங்கம், கொண்டு செல்வதற்காக பாரம்பரியமான முறையில், கட்டிகளாகவே வடிவமைக்கப்படுகின்றது.

ஒலிம்பிக் போட்டிகளில் வழங்கப்படும் தங்க பதக்கங்கள் முழுமையாக தங்கத்தில் தயாரிக்கப்பட்டவை அல்ல, 92.5 சதவீதம் வெள்ளி தான் பயகன்படுத்தப்படுகின்றது. வெறும் 6 கிராம் மட்டுமே தங்கம் கொண்டு முலாமிடப்படுகின்றது.
மேலும் ஒரு ஆச்சரியமான உண்மை என்னவென்றால் நமது உடலிலும் 0.2 மில்லி கிராம் அளவுக்கு தங்கம் இருக்கின்றது. அது பெரும்பாலும் நமது உடலில் ரத்தத்தில் தான் கலந்திருக்கின்றது. தங்கம் நச்சுத்தன்மை அற்ற ஒரு உலோகம் என்பதால், உணவிலும், அழகுசாதன பொருட்களிலும் கூட தங்கத்தை பயன்படுத்தலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |