நீங்கள் பிறப்பதற்கு முன்பே இவை எழுதப்பட்டுவிட்டன....
எல்லாம் தலை விதி என்று சிலர் கூறக் கேட்டிருப்போம். உண்மையிலேயே நாம் பிறப்பதற்கு முன்னர் நமது ஆயுள், செல்வம், கர்மா என்பன எழுதப்பட்டு விட்டதா?
சாணக்கிய நீதியின்படி ஒரு மனிதன் தாயின் கருவில் இருக்கும்போதே அவனது விதி எழுதப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இனி அதைக் குறித்து பார்ப்போம்...
செல்வம்
ஒரு நபர் தனது வாழ்வில் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் என்பதும் எந்தளது கல்வியில் மிளிர்வார் என்பதும் ஏற்கனவே சாணக்கிய விதிப்படி எழுதப்பட்டுவிட்டது. அதை மீறி அவர் என்ன செய்ய எத்தனித்தாலும் அதில் ஏமாற்றம் மாத்திரமே மிஞ்சும்.
கர்மா
நமது வாழ்க்கையில் வரும் நல்லது, கெட்டது இரண்டுமே நம் கடந்தகால கர்மங்களின் விளைவாகவே கருதப்படுகிறது. நிகழ்காலத்தில் செய்யும் நன்மைகளின் மூலம் கர்மாவினை மேம்படுத்தலாம். ஆனால், கடந்த கால கர்மாவின் கணக்கை யாராலும் மாற்ற முடியாது.
ஆயுள்
ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து வாழ்வில் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் இறக்கும் நேரம் என்பன முன்கூட்டியே குறிக்கப்பட்டிருக்கும். எவ்வளவு முயற்சி செய்தாலும் ஆயுளை அதிகரிக்க முடியாது.
மரணம்
ஒரு மனிதன் பிறக்கும் நாளிலேயே அவன் இறக்கும் திகதியும் குறிக்கப்பட்டு விடுகிறது. இந்த மரணத்தை தள்ளிப் போட பல முயற்சிகளில் ஈடுபட்டாலும் அதை தடுக்க முடியாது என்று கூறப்படுகிறது.