கருவில் உருவாகும் முதல் உறுப்பு எது தெரியுமா? இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பும் அதுதான்
நம்ப முடியாத சில ஆச்சரியங்கள் பல குவிந்து கிடக்கின்றது. அவற்றில் சிலவற்றை தெரிந்து கொள்ளுவோம்.
கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு இதயம். மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு இதயம்.
உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் பற்றி எல்லோருக்கும் தெரியும். அதை வரைந்தவர் லியோனார்டோ டாவின்சி. இவர் தான் நாம் இன்று பயன்படுத்தும் கத்தரிக்கோலையும் கண்டுபிடித்தார்.
ஒரு வாயுவாக, ஆக்சிஜனுக்கு மனமும் கிடையாது, நிறமும் கிடையாது. ஆனால் அதன் திரவ மற்றும் திட வடிவங்களில், இது வெளிர் நீல நிறமாக இருக்கிறது.
ஒரு நபர் இறந்த பிறகும் அவரது உடலில் இருந்து வாயு வெளியேறலாம். ஒருவரது உடலில் இருக்கும் எந்த வகையான வாயுவாக இருந்தாலும், இறந்த பிறகு தசைகளில் ஏற்படும் இறுக்கத்தால் வாயு தானாக உடலில் இருந்து வெளியேறிவிடும்.
கடல் குதிரை மற்றும் பைப்பிஷ் இரண்டும் தான் கடல் வாழ் உயிரினங்களில் கருத்தரிக்கும் ஆண் உயிரினங்கள் ஆகும்.
உண்மையான தேன் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாது. சேமித்து வைக்கப்பட்ட உண்மையான தேன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சாப்பிடும் தரம் கொண்டிருக்கும், கெட்டுப் போகாது.
உலகத்தில் உற்பத்தியாகும் பாதி அளவு ஆக்ஸிஜன் கடலில் இருந்து தான் வருகிறதாம். நமக்கான முழு ஆக்ஸிஜன் மரத்தில் இருந்து கிடைப்பதில்லை.
கடலில் இருக்கும் சிறிய நீர்வாழ் தாவரங்கள் இருக்கின்றன. இவை கார்பன்டை ஆக்சைடு மற்றும் சூரிய ஒளியை உட்கொண்டு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து வெளிபடுத்துகின்றன.