உயர் இரத்த அழுத்த பிரச்சனையா? ஏலக்காய் செய்யும் அற்புதம்
ஏலக்காய் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள நிலையில், இந்தியர்களின் சமையலில் அதிகமாக பயன்படுத்தப்பட்டும் வருகின்றது.
அசைவ உணவுகள் தொடங்கி இனிப்புகள் வரை அனைத்து உணவுகளிலும் ஏலக்காய் சேர்க்கப்படுகின்றது. இதனை வாய் புத்துணர்ச்சிக்காக அதிகமானோர் பயன்படுத்துகின்றனர்.
ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்தும் ஏலக்காய்
உயர் ரத்த அழுத்தம் என்பது ரத்த நாளங்களில் அதிகரிக்கும் அழுத்தம் ஆகும். இவை அதிகரிப்பதற்கு பல காரணங்கள் காணப்படலாம். அதிக கொழுப்பு, அதிக எடை, புகைபிடித்தல் என பல காரணங்களா உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இவற்றை கட்டுப்படுத்தவில்லை என்றால் பல பிரச்சினைகள் ஏற்படும்.
ஏலக்காயின் ஆக்ஸிஜனேற்ற மற்றும் டையூரிடிக் பண்புகள் உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு ஆரோக்கியமான ரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவுகிறது.
இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் உதவி செய்கின்றது. கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது உயர் ரத்தத்திற்கான முக்கிய காரணமாகும்.
ஏலக்காய் ஒரு டையூரிடிக் ஆகும், அதாவது இது உங்கள் சிறுநீரின் அளவை அதிகரிக்கிறது. மேலும் உடலில் இருந்து அதிகப்படியான சோடியம் மற்றும் பொட்டாசியத்தை நீக்குகிறது.
ஏலக்காயை உட்கொள்ளும் போது, அதன் அளவைக் கண்காணிப்பது அவசியம். உங்கள் சமையலில் ஏலக்காயை சேர்க்கலாம். நீங்கள் இதை வாய் புத்துணர்ச்சியாகவும் பயன்படுத்தலாம் அல்லது உங்கள் தேநீர் அல்லது பாலில் சேர்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |