வாழ்நாள் முழுதும் ரத்த அழுத்தம் பிரச்சினை வரவே கூடாதா? இந்த தவறை செய்யாதீங்க
உயர் ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சில மாற்றங்களை செய்வது அவசியமாகும். அந்த வகையில் குறித்த மாற்றங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
உயர் ரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் என்பது இதய நோய்களுக்கு முக்கிய காரணமாகக் காணப்படும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்றாகும். இவை தமனிகளில் இரத்த அழுத்தம் அதிகரிப்பதையே குறிக்கின்றது.
தமனிகளில் ரத்த ஓட்டத்தினை பராமரிக்க இதயம் அதிகமாக வேலை செய்ய வேண்டுமாம். மேலும் வாழ்க்கை முறை, உடல் எடை, புகைப்பிடித்தல், மது அருந்துதல், சரியான உணவு, தூக்கம் இல்லாமை, பதற்றம் மற்றும் மன சோர்வு, உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதும் முக்கிய காரணமாகும்.
தற்போது உயர் ரத்த அழுத்தத்தை தவிர்க்க செய்யக்கூடாத விடயத்தைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
உப்பு அதிகமாக உட்கொள்ளுதல்
இதய நோய் மற்றும் இரத்த அழுத்த பிரச்சினை அதிகரிக்கும் உப்பை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள மற்றும் தொடர்ந்து வேலை செய்ய உப்பு அவசியம் என்றாலும், அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதிக கொழுப்புள்ள உணவை உண்ணுதல்
ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்த கொழுப்புச் சத்து உள்ள உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். முழு கொழுப்புள்ள பால்-கிரீம், வெண்ணெய், சிவப்பு இறைச்சி போன்றவை எடுத்துக்கொாள்ள கூடாது. இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் உடம்பில பல பிரச்சினைகள் ஏற்படும்.
மது அருந்தும் பழக்கம்
மது அருந்தும் பழக்கமும் உயர் ரத்த அழுத்தத்திற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. ரத்த அழுத்த பிரச்சினைக்கு மருந்து எடுத்துக் கொள்ளபவர்கள், மது அருந்தவும் செய்தால் மருந்துகளின் செயல்பாடு நிர்மூலமாகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |