உடல் எடை மற்றும் தொப்பையால் அவதிப்படுகின்றீர்களா? 2 பொருள் செய்யும் அதிசயம்
இன்று பெரும்பாலான நபர்கள் உடல் எடையினால் பெரிதும் அவஸ்தைப் பட்டு வருகின்றனர். மேலும் உடல்எடையினை குறைக்க பல வழிகளில் முயற்சிகளையும், டயட்டிலும் காணப்படுகின்றனர்.
ஆனால் எடை அதிகரிப்பது என்பது ஒரு நோயல்ல. ஆனால் இவை அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம், இதய தமனி நோய் இவற்றினை கொண்டு வரும். இதனாலே தான் பலரும் உடல் எடையை குறித்து அதிகமாக கவலை படுகின்றனர்.
தற்போது வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்து உடல் எடை மற்றும் தொப்பையை எவ்வாறு குறைக்கலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
உடல் எடையைக் குறைக்கும் 2 டிப்ஸ் இதோ
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெண்பூசணி ஜுஸை குடித்து வருவதன் மூலம் உடல் எடையை மிக விரைவாக குறைக்க முடியும். மேலும் இந்த ஜுஸை பருகுவதால் அதிகமாக சாப்பிடும் எண்ணத்தையும் குறைக்கின்றது.
ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை, மற்றும் அரை டம்ளர் வெந்நீர், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு இவை மூன்றையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்பு இந்த ஜுஸை வடிகட்டி குடித்து வரவும். இவை உடல் எடை குறைப்பதுடன், முடி அடர்த்தியாக வளர்வதற்கு உதவி செய்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |