பூனைக்கு வழங்கும் சாப்பாட்டை சாப்பிடும் கோடீஸ்வர பெண்... காரணத்தைக் கேட்டால் நிச்சயம் ஷாக் ஆகிடுவீங்க
இவ்வுலகில் பணம் இருப்பவர்கள் ஆடம்பரமாக வாழ்வார்கள் என்றும் நினைத்ததை சாப்பிடுவார்கள் என்றுதான் நம்மில் பெரும்பாலானோர் நினைத்து வருகின்றோம். பணம் இல்லாதவர்களுக்கு பணம் இல்லையே என்று கவலையிருந்தால் பணம் இருப்பவர்களுக்கு இதை ஏன் செலவு செய்கிறோம் என்று கவலை ஏற்படுவது இயல்புதான்.
ஆனால் அவ்வாறு இல்லை என்பதை நிரூபித்து நம்மை ஆச்சரியப்பட வைத்துள்ளார் கோடீஸ்வர பெண் தொழிலதிபர் ஒருவர்.
இந்நிலையில், அமெரிக்க நாட்டிலுள்ள லாஸ்விகாஸ்-ஐ சேர்ந்த பெண் தொழிலதிபர் செய்துள்ள செயல் நம்மை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
சுமார் சுமார் 50 லட்சம் டொலர்( ரூ.36 கோடி) சொத்து மதிப்புகள் இவருக்கு இருக்கின்றதாம். இந்நிலையில் தனது உணவிற்குச் செலவிடப்படும் தொகையை குறைப்பதற்காக பூனைகளுக்கு வழங்கும் உணவை சாப்பிட்டு வருகிறார்.
இந்தக் காலத்தில் இப்படியொரு நபரா? என்று அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.