சக்கரை நோயாளிகள் பால் குடிக்கலாமா? மருத்துவ விளக்கம்
பால் நல்ல ஒரு நிறையுணவாகும். இதை பசுமாட்டில் இருந்து எடுப்பார்கள். பாலில் அதிகளவான கால்சியம் நிறைந்துள்ளது. இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்க மருத்துவர்கள் எப்போதும் குறைந்த கொழுப்பு மற்றும் அதிக நார்ச்சத்து போன்ற சமச்சீரான உணவைப் பரிந்துரைக்கிறார்கள்.
அதிகப்படியான கொழுப்பு தீங்கு விளைவிக்கும் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். பல சர்க்கரை நோயாளிகளுக்கு எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கான காரணத்தை மருத்துவர்கள்விளக்குகின்றனர்.
அந்த வகையில் ரத்தத்தில் சக்கரை அளவு அதிகரிப்பதற்கு சில உணவுகள் காரணமாக இருக்கிறது. இந்த காரணத்தினால் தான் சர்க்கரை நோயாளிகள் பால் குடிக்கலாமா, வேண்டாமா என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பால்
சக்கரை நோயாளர்கள் ரத்தில் சக்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். இதற்கு நீண்ட காலத்திற்கு உங்கள் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைக் பாதுகாக்க உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றம் செய்வது அவசியமாகும்.
சக்கரை நோய் என்பது ஒரு தொற்றாத நோயாகும். இந்த நோய் வந்தால் உணவில் மிக கவனத்துடன் இருப்பது முக்கியம். சாப்பிடுவதில் சிறிது கவனக்குறைவு இருந்தாலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். சக்கரை நோயாளிகள் குறைந்த கொழுப்புள்ள உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
Fatty Liver Disease Symptoms : இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கல்லீரல் ஆபத்தில் இருக்குதுன்னு அர்த்தம்!
இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்க மருத்துவர்கள் எப்போதும் குறைந்த கொழுப்பு மற்றும் அதிக நார்ச்சத்து போன்ற சமச்சீரான உணவைப் பரிந்துரைக்கிறார்கள்.
பெரும்பாலான மக்கள் பாலை தங்கள் உணவுப் பகுதியில் ஒரு பங்காக எடுத்துக்கொள்கின்றனர். பாலில் கால்சியம், ப்ரோடீன் மற்றும் வைட்டமின் டி ஆகியவை நிறைந்துள்ளது.
பாலில், இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடிய கொழுப்புகள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. ஆனால் பால் சக்கரையின் அளவை அதிகரிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
பல சர்க்கரை நோயாளிகளுக்கு எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது, எனவே கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது சக்கரை நோயாளிகளின் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது.
சக்கரை நோயாளிகளுக்கு ப்ரோடீன் மிகவும் முக்கியமானது. ப்ரோடீன் நிறைந்த பாலில் ஒன்பது அத்தியாவசிய அமினோ ஆசிட்கள் உள்ளன. எனவே உங்கள் உணவு அல்லது சிற்றுண்டியில் பாலை சேர்க்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இது மட்டுமல்லாமல் இது எடை குறைப்புக்கு நன்மை அளிக்கும் மற்றும் நீரிழிவை கட்டுக்குள் வைக்கும்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சக்கரை நோயாளிகள் உணவில் கால்சியம் நிறைந்த பாலை சேர்க்கலாம். ஆனால் மருத்துவர்களின் கூற்றுப்படி, கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள பாலை தேர்வு செய்ய வேண்டும் என பரிந்துரைக்கின்றனர். காரணம் முழு பாலில் அதிக நிறைவுற்ற கொழுப்பு இருப்பதால், இதய நோய் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |