உங்ககிட்ட இந்த மருந்துவில்லைகள் இருந்தால் உடனே தூக்கி போடுங்க- 156 மருந்துகளுக்கு அரசு தடை
இந்தியாவில் காய்ச்சல், சளி, ஒவ்வாமை மற்றும் வலி உள்ளிட்ட நோய்கள் வந்தால் பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகள் மருந்து கடைகளில் பரவலாக விற்கப்படுகின்றன.
சுமாராக 156 வகையான மருந்துவில்லைகளின் கலவை (FDC) மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என இந்திய அரசாங்கம் தடை செய்துள்ளது.
FDC மருந்துகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செயலில் உள்ள மருந்து பொருட்களின் கலவை எனக் கூறப்படுகின்றது. இந்த வகை மருந்துவில்லைகளை “காக்டெய்ல்” என அழைக்கிறார்கள்.
சமீபத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, பிரபலமான மருந்து நிறுவனம் தயாரிக்கும் வலி நிவாரணி மருந்துகளில் ஒன்றாக பயன்படுத்தப்படும் 'Aceclofenac 50mg Paracetamol 125mg மாத்திரையை அரசு தடை செய்துள்ளது.
இது தவிர இன்னும் 155 FDC மருந்துகளை இந்திய அரசு பாதுகாப்பற்றதாக கருதி விற்பதற்கு தடை விதித்துள்ளது.
தடை செய்யப்பட்ட மருந்துகள்
- மெஃபெனாமிக் அமிலம் + பாராசிட்டமால் ஊசி
- செடிரிசின் எச்.சி.எல் + பாராசிட்டமால் + ஃபெனைல்ஃப்ரைன் எச்.சி.எல்
- லெவோசெடிரைசின் + ஃபெனைலெஃப்ரின் எச்.சி.எல் + பாராசிட்டமால்
- பாராசிட்டமால் + குளோர்பெனிரமைன் + மாலேட் + ஃபீனைல் ப்ரோபனோலமைன்
- கேமிலோபின் டைஹைட்ரோகுளோரைடு 25 மி.கி பாராசிட்டமால்
- டிராமடோல் என்னும் ஒரு ஓபியாய்டு அடிப்படையிலான வலி நிவாரணி
டாரைன், காஃப்பைன் ஆகியவற்றின் கலவையையும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இப்படியான மருந்துவில்லைகளை தொடர்ச்சியாக பயன்டுத்தினால் ஆபத்து ஏற்படக் கூடும். இப்படி FDC மருந்துகளை பகுத்தறிவற்றதாக கருதி, ஒரு நிபுணர் குழுவைக் கொண்டு ஆய்வு செய்ததாக அரசு கூறியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |