Fatty Liver Disease Symptoms: இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கல்லீரல் ஆபத்தில் இருக்குதுன்னு அர்த்தம்
பொதுவாக உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடலில் காணபப்படும் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்க வேண்டியது அவசியம்.
அந்த வகையில் உடல் உறுப்புகளுள் மிகவும் முக்கியமான உறுப்புக்களுள் ஒன்று கல்லீரல். நாம் உண்ணும் உணவின் செரிமானத்திற்கு இந்த உறுப்பு இன்றியமையாதது.
உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவதிலும் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கின்றது. பொதுவாகவே கல்லீரல் பாதிப்படைவதற்கு மதுபானம் மற்றும் புகைத்தல் ஆகியவற்றுடன் மரபியல் கோளாறுகளும் காரணமாக அமைகின்றது.
கல்லீரல் பாதிப்புகளில் மிகவும் அபாயகரமான பாதிப்பு தான் ஃபேட்டி லிவர் ஆகும். இந்நிலை அதிகப்படியான மதுபானங்கள் அருந்துவதால் ஏற்படக்கூடியதாகவோ அல்லது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உடற்பருமன், நீரிழிவு நோய் போன்ற நாள்பட்ட நோய் காரணமாகவும் ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. இது தொடர்பான முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஃபேட்டி லிவர் என்றால் என்ன?
பொதுவாக குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை யாருடைய கல்லீரலிலும் கொழுப்பு இருக்காது. கல்லீரலில் கொழுப்பு படிப்படியாக சேர்ந்து ஆபத்தான கட்டத்தை அடையும் போது ஏற்படும் நோய் நிலை தான் ஃபேட்டி லிவர் எனப்படுகின்றது.
இவ்வாறு படிய ஆமரம்பிக்கும் கொழுப்பு கல்லீரலின் மேல் படியாமல் கல்லீரலில் உள்ள திசுக்களுக்குள் படிய ஆரம்பிக்கும் ஒருவருடைய கல்லீரலில் ஐந்து சதவிகிதம்வரையில் கொழுப்பு காணப்படுவது இயல்பானது. ஆனால் அதற்கு மேல் இருந்தால் கல்லீரலின் செயல்பாடு படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
Non-Alcoholic Fatty Liver என்றால் என்ன?
ஃபேட்டி லிவர் பிரச்சினை பெரும்பாலும் மது பழக்கம் இருப்பவர்களுக்கே அதிகமாக ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. இது மதுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் வேறுசில காரணங்களுகளால் ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது.
உடல் பருமன், நீரிழிவு, ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த குறைபாடு, தைராய்டு உடையவர்களும் இந்த நோயால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
முறையற்ற உணவுப் பழக்கமும், மாறிவரும் வாழ்க்கை காரணமாகவும், மது பழக்கம் இல்லாதவர்களுக்கும் கூட ஃபேட்டி லிவர் ஏற்படும் அபாயம் இருக்கின்றது.
முக்கிய அறிகுறிகள்
தொடர்ச்சியான வலி மற்றும் அசௌகரியம் கடுமையான கொழுப்பு கல்லீரல் நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
அடிவயிற்றின் மேல் பகுதியில் தொடர்ந்து வலி அல்லது அசௌகரியத்தை உணர்ந்தால் Fatty Liver பிரச்சினை இருக்கின்றது என கருதலாம்.
வயிற்று பகுதி அசாதாரணமாக வீங்கி காணப்படுதல்.
உங்கள் தோலின் கீழ் விரிந்த இரத்த நாளங்கள்
ஆண்களுக்கு இயல்பை விட பெரிய மார்பகங்கள் காணப்படுத்ல்.
கொழுப்பு அல்லது க்ரீஸ் உணவுகளை உட்கொண்ட பின்னர் அசௌகரியத்தை அனுபவிப்பது Fatty Liver பிரச்சினை தீவிரமாக இருப்பதை உணர்த்துகின்றது.
மூக்கிலிருந்து ரத்தப்போக்கு ஏற்படும். சிலருக்கு வெயில்காலங்களில் இதுபோன்று மூக்கிலிருந்து ரத்தப்போக்கு ஏற்படக்கூடும். ஆனால் அடிக்கடி மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தால் கல்லீரல் பாதிப்பு அபாயம் காணப்படுகின்றது.
Fatty Liver பிரச்சினை உள்ளவர்களுக்கு பொதுவாக நோயின் இறுதி நிலை வரை அறிகுறிகள் இருக்காது. முக்கிய அறிகுறிகளாக எடை இழப்பும், பசியின்மையும் குறிப்பிடப்படுகின்றது.
வயிறு எப்போதும் நிறைந்திருப்பது போன்ற உணர்வு இருக்கும். ஆனால் சோர்வாக உணர்வீர்கள்.
மேலே குறிப்பிட்டுள்ள ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளைத் தவிர, கல்லீரல் பாதிப்பு இன்னும் பிற அறிகுறிகளையும் ஏற்படுத்தலாம்
மஞ்சள் காமாலை
கால்கள், கணுக்கால் மற்றும் கால்களில் திரவம் குவிவதால் ஏற்படும் வீக்கம்
அடிவயிற்றில் வீக்கம்.
அதிக தோல் அரிப்பு முடி கொட்டுதல்.
வழக்கத்திற்கு மாறாக வளைந்த விரல் நுனிகள் மற்றும் நகங்கள் கருமையான சிவப்பு உள்ளங்கைகள் குறிப்பிடத்தக்க எடை இழப்பு உட்புற இரத்தப்போக்கு காரணமாக கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுவது.
வாந்தியில் இரத்தம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
கல்லீரல் சம்பந்தமான நோய்கள் தீவிரம் அடைந்த பின்னரே இதன் அறிகுறிகள் வெளிப்படும் எனவே இது குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |