சூப்பர் ஸ்டார் வீட்டில் மீண்டும் ஒரு திருட்டு! பரபரப்புடன் புகார் கொடுத்த சௌந்தர்யா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் மறுபடியும் ஒரு திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றது.
ரஜினிகாந்தின் வாழ்க்கை பயணம்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இன்றும் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
அதில் ஒருவர் சினிமா இயக்குநராக இருந்து வருகிறார், மேலும் இளைய மகள் சமீபத்தில் மகனை பெற்றெடுத்துள்ளார்.
இந்த நிலையில் இயக்குநராக இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் வேலை செய்த பெண், அவர் வீட்டிலுள்ள தங்க நகைகள் மற்றும் வைர மோதிரங்களை திருடிய திருட்டு சம்பவமொன்று இடம்பெற்றது.
மறுபடியும் ஒரு திருட்டு
இதனை தொடர்ந்து குறித்த பெண்ணும், கார் ஒட்டுநரும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றது.
இப்படியொரு நிலையில் தற்போது இளம் பெண் சௌந்தர்யா வீட்டிலுள்ள கார் சாவியை காணவில்லை என மீண்டும் ஒரு புகார் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ரஜினி வீட்டிலுள்ளவர்கள் தேனாம்பட்டை பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் புகார் கொடுத்துள்ளார்.
இது போல் ரஜினி வீட்டில் அடுத்தடுத்து திருட்டு சம்பவம் இடம்பெறுவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.