என்னது... ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பினாமியா ஈஸ்வரி?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் அண்மையில் நகைகள் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நகைகள் திருட்டு சம்பவத்தில் அவரது வீட்டில் வேலை பார்த்த ஈஸ்வரி என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் ஈஸ்வரி மற்றும் ஓட்டுநர் வெங்கடேசனிடமிருந்து 95 லட்சம் மதிப்புமிக்க நிலப் பத்திரம், 100 சவரன் நகை, வைர நகைகள், வெள்ளி பொருட்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டது. “இவ்வளவு பணம் ஏது?”என ஈஸ்வரியின் கணவர் கேட்டபோது, வெளி உலகத்துக்குதான் இது நம் வீடு.
உண்மையில் இது ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு சொந்தமான வீடு என்றும் ஐஸ்வர்யா தனது பெயரில் பினாமியாக வீடு, நகைகள் அனைத்தையும் வாங்கியதாகவும், அவர் திருடிய பணத்தில் கணவருக்கு காய்கறி, மளிகை கடை வைத்துக்கொடுத்தது, மகளுக்கு திருமணம் செய்து வைத்தது போன்றவையும் பொலிஸ் விசாரணையின்போது வெளிவந்துள்ளது.
18 ஆண்டுகளாக ஐஸ்வர்யா வீட்டில் தொழில் புரியும், ஈஸ்வரி கொஞ்சம் கொஞ்சமாக அங்குள்ள நகைகளை திருடியதாகவும் தனுஷ் வீட்டிற்கும் இவரே தனது கடையிலிருந்து காய்கறி, மளிகைப் பொருட்களை எடுத்துச் செல்வார் என்றும் தெரியவந்துள்ளது.
இதனால் அவர் தனுஷ் வீட்டிலும் தனது திருட்டு வேலையை காட்டியிருக்க வாய்ப்பிருப்பதாகவும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.