நடைபயிற்சி செல்வதால் ரத்த சர்க்கரை எந்த அளவுக்கு குறையும்?
உலகத்தில் பெரும்பாலான மக்கள் டைப் 2 நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், நடைபயிற்சி மேற்கொண்டு எவ்வாறு குறைக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
டைப் 2 நீரிழிவு
இந்தியாவில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 100 மில்லியனுக்கும் அதிகமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரத்த சர்க்கரையை குறைக்க வேண்டும் என்றால் தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
அதிலும் மிக எளிமையான நடைபயிற்சி செல்வதன் மூலமாக ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த முடியும் என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் கூறுகின்றது.
சர்க்கரை நோய் அறிகுறிகள்:
அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிகமான பசி, சோர்வு, தாகம், மங்கலான பார்வை என்பதே சர்க்கரை நோயின் அறிகுறிகள் ஆகும்.
சீரான உணவுப்பழக்கம், தினமும் உடற்பயிற்சி, தொடர்ந்து மருந்து எடுத்துக்கொள்ளுதல், இன்சுலின் செலுத்திக் கொள்ளுதல் இவற்றின் மூலம் நாம் எதிர்கொள்ள முடியும்.
ஆதலால் குறித்த நோயின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை பெற்று கட்டுப்பாட்டிற்கு வைக்க வேண்டும்.
நடைபயிற்சியினால் நன்மை
பிரிட்டிஷ் விளையாட்டு மற்றும் மருத்துவ ஆய்வு இதழில் நடைபயிற்சி மூலமாக நீரிழிவு நோயின் அபாயத்தை 40 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு 3.2 கி.மீ தொலைவிற்கு நடக்கலாம் என்றும், அதி வேகமாக செல்பவர்கள் என்றால் 3.2 கி.மீ முதல் 4.8 கி.மீ வரை நடக்கலாமாம்.
இன்னும் அதிகமாக நடிப்பவர்கள் 4.8 கி.மீ முதல் 6.4 கி.மீ வரை நடிக்கலாம் என்றும் ஒவ்வொரு கி.மீ தொலைவிற்கும் 9 சதவீதம் வரையில் சர்க்கரை நோய்க்கான அபாயம் குறைவதாகவும், ஒரு மணி நேரத்திற்கு 6 கி.மீற்றர் தொலைவு நடப்பவர்களுக்கு நோயின் அபாயம் 39 சதவீதம் வரை குறைவதாக தெரியவந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |