குளிர் காலத்தில் கை, கால், வலி ஏற்படுவது ஏன்?
மழை மற்றும் குளிர்காலங்களில் பெரும்பாலான நபர்களுக்கு கை, கால்களில், வலி, குத்தல், குடைச்சல் பிரச்சினை ஏற்படும். இதற்கான தீர்வு என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
மழைகாலங்களில் கை, கால் வலி
மழைக்காலங்கள் அல்லது குளிர் காலங்களிலோ லேசான ஈரப்பதம் கூட சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் அவற்றிற்கு மருந்து, மாத்திரைகளை எடுததுக் கொள்கின்றனர்.
மழை மற்றும் குளிர்காலத்தில், superficial blood vessels என்ற மேலோட்டமான ரத்தக் குழாய்கள் சுருங்கிவிடுவதால், சருமத்தின் நிறம் சற்று வெளிறி காணப்படுகின்றது. இதுவே கோடை காலத்தில் நமது சருமத்தின் நிறம் கருப்பாகவே இருக்கும்.
குளிர்காலத்தில் கதகதப்பான ஆடைகளை அணியாமல் இருந்தால், குளிரானது நமது எலும்புகள் வரை சென்று நமது ரத்த ஓட்டத்தை குறைத்துவிடுகின்றது. இதனால் வலி, குடைச்சல் ஏற்படுகின்றது.
ஆதலால் மழை மற்றும் குளிர் காலங்களில் வீட்டிற்குள்ளே உடற்பயிற்சி மேற்கொள்ளவும். இதனால் உடல் கதகதப்பாக இருப்பதுடன், வலி, குடைச்சல் இருக்காது.
இந்த காலத்தில் பலரும் தண்ணீர் பருவது இல்லை. இதனால் தசைகளின் இயக்கம் தடைபடுவதுடன் கை, கால் குடைச்சல் ஏற்படும். ஆதலால் சரியான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
குளிர்காலத்தில் காய்கறிகள் மற்றும் பழங்கள், நட்ஸ் வகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |