சர்க்கரை வியாதியுள்ளவர்கள் இரத்த தானம் செய்யலாமா?
பொதுவாக இரத்தத்தில் ஏதாவது நோய் இருப்பவர்கள் மற்றும் மதுபானம் அருந்திருப்பவர்கள் இரத்த தானம் கொடுக்க மாட்டார்கள்.
மேலும் இரத்த எடுக்கும் போது மருத்துவர்கள் மேற்குறிப்பிட்ட விடயங்களை ஆராய்வு செய்த பின்னரே மேலதிக விடயங்களை செய்வார்கள்.
அந்த வகையில் இரத்தம் தானம் செய்யும் நாம் முதலில் ஆரோக்கியமானவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு இருக்கும் போது தான் நாம் கொடுக்கும் இரத்தம் சிறந்த முறையில் நோயாளிக்கு பயனளிக்கும்.
இதனை தொடர்ந்து சர்க்கரை வியாதியுள்ளவர்கள் இரத்த தானம் செய்யலாமா? என பல சந்தேகங்கள் இருக்கும் இது குறித்து தொடர்ந்து கொள்வோம்.
இரத்த தானம்
சர்க்கரை நோயாளிகள் ரத்ததானம் போன்ற செயலை தாராளமாக செய்யலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் சில குறிப்புகளை அவர்கள் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருந்தாலோ அல்லது சிறுநீரக பாதிப்பு மற்றும் இருதய பாதிப்பு இருந்தாலும் அவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது.
மேலும் சர்க்கரை பாதிப்புக்கு இன்சுலின் செலுத்தி கொள்பவர்கள் உடல் எடை 45 கிலோவுக்கும் குறைவானவர்கள் ரத்ததானம் செய்ய வேண்டாம்.
அதேபோல் ஹீமோகுளோபின் 12.5 கிராமுக்கு குறைவாக இருப்பவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், மலேரியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர்களும் ரத்த தானம் செய்ய கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.