சர்க்கரை வியாதியுள்ளவர்கள் தேங்காய் பூ சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
பொதுவாக தற்போது இருக்கும் இளைஞர்கள், குழந்தைகள் என அனைவரும் அதிகமாக நோய்வாய்ப்படுகிறார்கள்.
இதற்கான முக்கிய காரணம் என்ன என்பது பற்றி ஆராய்ந்து பார்க்கையில் திக்கிடும் பல உண்மைகள் வெளிவந்துள்ளது.
சாப்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வேலை வேலை என ஒடிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு நாளுக்கு நாள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொண்டே வருகிறது.
இதனால் சிறுவயதிலேயே தொற்றுக்கள், சர்க்கரை வியாதி என பல நோய்களில் சிக்கி கொள்கிறார்கள்.
அந்த வகையில் உடம்பிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதில் தேங்காய் பூ முக்கிய இடத்தை பிடிக்கிறது.
தேங்காய் பூ என்றால் தேங்காயை உடைத்து அதனை துருவும் போது கிடைக்க பெறும் அந்த பூ அல்ல. தேங்காயுடன் சேர்ந்து வளரும் ஒரு வகை மோட்டு போல் காணப்படும்.
இதன்படி, தேங்காய் பூவில் ஒளிந்திருக்கும் மருத்துவ குறிப்புகள் பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.