சர்க்கரை நோயாளிகளில் எந்த பிரிவினர் இரத்த தானம் கொடுக்கலாம்? எச்சரிக்கை... தவறு நடந்தால் ஆபத்து நிகழும்
நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்யக் கூடாது என்ற தவறான கருத்து மக்களிடையே நிலவி கொண்டு வருகின்றன. நீரிழிவு நோயாளிகள் இரத்த தானம் செய்வது பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு உள்ளவர்கள் தாராளமாக இரத்த தானம் கொடுக்கலாம். நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, ஆரோக்கியமான உணவைப் பின்பற்றி, உடற்பயிற்சி செய்து வந்தாலே, உங்கள் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கலாம்.
நீங்கள் இரத்த தானம் செய்வதற்கு முன் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் நீங்கள் நீரிழிவு மருந்துகளை எடுத்துக் கொண்டு இருப்பீர்கள். அது உங்கள் இரத்தத்தில் கலந்துள்ளதா என்பதை உறுதி செய்வது அவசியசம். நீரிழிவு நோய் இருப்பவர்கள் இதய நோய்கள் எதாவது இருக்கிறதா என்பதை முதலில் பரிசோதனை செய்ய வேண்டும்.
அதன்பின்னர்தான் இரத்த தானம் கொடுக்க வேண்டும். டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயாளிகள் இன்சுலினை உள் வழியாக எடுத்துக் கொண்டு இருந்தால், அவர்கள் இரத்த தானம் செய்யலாம். நீரிழிவு மருந்துகள் எடுத்துக் கொள்ளும் நபர்கள் இரத்தம் கொடுக்க விரும்பினால் நான்கு வாரங்களுக்கு மருந்து எதையும் மாற்றவே கூடாது.உங்கள் மருந்துகள் மாறி விட்டால், அது உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை பாதித்திவிடும். இதனால் உடல்நிலை ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் வரலாம்.
இரத்த தானம் செய்வதற்கு முன்னர்
இரத்த தான மையங்களில் ஒரு ஸ்கிரீனிங் செயல்முறை இருக்கிறது.
எனவே உங்கள் உடல்நிலை குறித்து முன்னரே அவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் முதற்கொண்டு சொல்லி விட வேண்டும்.
அதே நேரத்தில் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உங்கள் உடல் எடையையும் சராசரியாக பராமரிக்க வேண்டியது அவசியம்.