உங்கள் குழந்தைகளுக்கு பால் புட்டியில் பால் கொடுக்குறீங்களா?... கவனம்
குழந்தைகளின் பால்புட்டிகளில் பயன்படும் பிஸ்பினால் ஏ வை மருத்துவ பாதிப்புக்களின் காரணமாக தடை செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து பிஸ்பினால் ஏவை வேறு பொருட்களுக்கு உபயோகப்படுத்துகிறார்களா?
அதன் மூலம் பிஸ்பினால் ஏ குழந்தைகளை சென்றடைந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றதா என்பது தொடர்பான தகவல்களை இந்த குறிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
image - PNI News
பிஸ்பினால் ஏ பயன்பாடு எவ்வாறு தொடங்கியது?
1891இல் ரஷ்ய வேதியியலாளரான டையனின் என்பவர் முதன்முறையாக பிஸ்பினால் ஏ வை கண்டுபிடித்தார். அதன்பின்னர் 1950ஆம் ஆண்டு பாலிகார்பனேட் ப்ளாஸ்டிக் உற்பத்திக்கு இந்த பிஸ்பினால் ஏ வை பயன்படுத்தத் தொடங்கினர்.
அதன் பின்னர் பால் புட்டிகள், ப்ளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் போத்தல்கள் போன்ற உற்பத்திகளுக்கு சுமார் 65 வருடங்களுக்கும் மேலாக இந்த பிஸ்பினால் ஏ பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 1936ஆண்டு முதல் எபோக்சி பிசின் உற்பத்திக்கு பிஸ்பினால் ஏ பயன்படுத்த தொடங்கப்பட்டது.
இந்த போத்தல் மூடி, தண்ணீர் பைப் போன்றவற்றுக்கு எபோக்சி பிசின் உபயோகப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனால் ஆண்டுதோறும் பிஸ்பினால் ஏ வின் உற்பத்தி சுமார் 8 லட்சம் தொன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
image - Our Globetrotters
இந்த பிஸ்பினால் ஏ வினால், என்னென்ன பாதிப்புக்கள் ஏற்படுகின்றது?
குறைப்பிரசவம், மலட்டுத்தன்மை, கருக்கலைப்பு, குழந்தையின் எடை குறைவாக இருத்தல் மற்றும் இனப்பெருக்கம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
அதுமட்டுமில்லாமல் நீரிழிவு, இதய நோய், உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் பாதிப்பு, ஆஸ்துமா போன்ற பாதிப்புக்களும் ஏற்படுகின்றது. இதனால் 2008 ஆம் ஆண்டிலிருந்து பிஸ்பினால் ஏ பால் புட்டிகள் தடை செய்யப்பட்டுள்ளன.
image - You Tube
எந்தெந்த பொருட்களின் உற்பத்தியில் பயன்படுத்த தடை உள்ளது?
பிஸ்பினால் ஏயினால் செய்யப்பட்ட புட்டிகளில் பால் கொடுக்கும்போதும், பிஸ்பினால் ஏயினால் செய்யப்பட்ட போத்தல்களில் தண்ணீர் குடிக்கும்போதும் இவ்வாறு அதன் சேர்மானம் உள்ள பொருட்களை பயன்படுத்தும்போது மருத்துவ பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது.
image - iStock
பிஸ்பினால் ஏ உடலில் சேர்வதை எவ்வாறு தடுப்பது?
புட்டிப்பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு தேவையேற்படின் ஒரு வயது வரை பாலாடையிலும் அதன் பின்னர் டம்ளரிலும் பால் கொடுத்துப் பழக்கலாம்.
பிஸ்பினால் ஏ கலந்துள்ள தண்ணீர் பைப்கள், தண்ணீர் போத்தல்கள், உணவு கேன்கள் என்பவற்றை உபயோகப்படுத்துவதை தவிர்க்கலாம்.
நீர் நிலைகளில் ப்ளாஸ்டிக் கழிவுகள் சேர்வதைத் தடுக்க வேண்டும்.