Plastic Surgery செய்யப் போறீங்களா?
தான் விரும்பிய முகம்,கை,கால்தான் வேண்டும் என்று யாரும் கூறமுடியாது. அவரவருக்கென்று எது கொடுக்கப்பட்டுள்ளதோ அதுவே அழகு.
ஆனால், அதையும் மாற்றியமைக்க வந்திருப்பதே ப்ளாஸ்டிக் சர்ஜரி போன்ற போன்ற மருத்துவ சிகிச்சை முறைகள்.
இதை பெரும்பாலும் பிரபலங்களே செய்து கொள்வர். மூக்கை கூர்மையாக்கிக் கொள்ளல், உதட்டை நேர்த்தியாக்கல் போன்றவை அதற்குள் அடங்கும். இதற்காக எவ்வளவு பணத்தை செலவிடவும் தயாராக உள்ளனர்.
இதைப் போல் ப்ளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை முறையைச் செய்துகொண்ட பல பிரபலங்களை நாம் பார்த்திருப்போம்.
அதில் பொப் இசையின் அரசனாகக் கருதப்பட்ட மைக்கல் ஜெக்சனை எடுத்துக்கொண்டால், அவர் பிறக்கும்போது கறுப்பு நிறத்திலேயே இருந்தார்.
காலப்போக்கில் அவரது நிறம் மாறி வெண்மையாகியது. இதற்கு பல கதைகள் கூறப்பட்டபோதிலும் அறுவை சிகிச்சை செய்து தனது மூக்கின் அமைப்பை மாத்திரமே தான் மாற்றிக்கொண்டதாக மைக்கல் ஜெக்சனே கூறியது குறிப்பிடத்தக்கது.
பிரபலங்கள் என்றவுடன், அழகு அங்கே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அதனால் சுமாராக இருக்கும் தங்களின் உடல் உறுப்புக்களை இதுபோன்ற அறுவை சிகிச்சைகளின் மூலம் சற்று எடுப்பாக காட்ட முயற்சிக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் வயிற்றில் அனாவசியமாக தொங்கும் சதையை நீக்குதல், ஆறாத காயம், தீக்காயத்தால் ஏற்பட்ட தழும்பு, குண்டானவர்களின் உடலில் சேர்ந்த கொழுப்பை உறிஞ்சுதல், உடலில் ஏற்பட்ட சுருக்கங்களை நீக்குதல் போன்ற சிகிச்சைகளும் இருக்கின்றன என வைத்தியர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இதுபோன்ற சிகிச்சைகள் செய்வதன் மூலம் சில வேளைகளில் பின் விளைவுகள் மோசமானதாக இருக்கலாம். ஏனென்றால் எல்லா உடலுக்கும் இதுபோன்ற சிகிச்சைகள் ஒத்துவருமா? என்பது சந்தேகமே.