நடிகை சாந்தினி கருக்கலைப்பு விவகாரம்- மணிகண்டன் மனைவி பரபரப்பு புகார்!
கடந்த சில நாட்களாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் அளித்த நடிகைக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் , தன் கணவர் மீது பொய் புகார் கூறி தங்கள் குடும்பத்தின் மீது அவதூறு பரப்பி வருவதாக முன்னாள் அமைச்சரின் மனைவி, நடிகை மீது பகீர் புகார் அளித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், கட்டாயக் கருக்கலைப்பு செய்தல், பாலியல் பலாத்காரம், பாலியல் வன்முறை, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட ஆறு பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியானது. ராமநாதபுரத்தில், மணிகண்டனுக்கு சொந்தமான இடங்களில், போலீசார் அவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், மணிகண்டன் முன்னாள் அமைச்சர் என்பதால், அவர் மீது போடப்பட்டிருக்கும் ஒவ்வொரு பிரிவுக்கும் தேவையான தகுந்த ஆதாரங்களை போலீசார் தீவிரமாக சேகரித்து வருவதாக தெரிகின்றது.
இந்நிலையில், ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கிடம் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனைவி வசந்தி புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், தன் கணவர் மீது பொய்யான தகவலை பரப்பி,தங்கள் குடும்பத்திற்கு அவமரியாதையையும், மன உளைச்சல் ஏற்படுத்தி வரும் நடிகை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.