பிக்பாஸ் டைட்டில் வின்னர்களின் தற்போதைய பரிதாப நிலை பற்றி தெரியுமா?
பிக்பாஸிக்கு போனால் படவாய்ப்புகள் கிடைக்கும் என நம்பிய அனைவரும் தற்போது படவாய்ப்பில்லாமல் தவிக்கிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சி
பிரபல தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. முதல் சீசன் முதல் இன்று வரை சென்றுக் கொண்டிருக்கும் சீசன் 6 வரை சுவாரஸ்யம் குறையாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு வாரமும் மக்களின் வாக்குகளின் படி குறைவான வாக்குகளைப் பெற்றவர்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
இவ்வாறு தான் கடந்த ஒவ்வொரு சீசனும் முடிவடைந்தது. இப்படிதான் 6சீசனும் முடிவடைந்தது அதேபோல 7ஆம் சீசனனும் அடுத்து ஆரம்பிக்கவுள்ளது.
படவாய்ப்பில்லாமல் தவிக்கும் டைட்டில் வின்னர்கள்
பிக்பாஸ் 6 சீசன்களையும் கடந்து வந்து விட்டது. இந்த 6 சீசன்களிலும் 6 டைட்டில் வின்னர்கள் இருக்கிறார்கள் இவர்கள் அனைவரும் ஒரு படவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள்.
முதலாவது சீசனின் வெற்றியாளராக இருந்த ஆரவ் நபீஸ் டைட்டிலை கைப்பற்றியிருந்தும் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவில் வரவேற்புக் கிடைக்கவில்லை.
இரண்டாவது சீசனில் வெற்றிப் பெற்ற ரித்விகா அவரும் சில படங்களில் சில வேடங்களில் நடித்திருந்தார் அவருக்கும் பெரிய அளவில் வரவேற்புக் கிடைக்கவில்லை.
மூன்றாவது சீசனில் கலந்துக் கொண்டு டைட்டில் வின்னரான முகின் ராவ் ஒரே ஒடு படத்தில் நடித்து விட்டு தற்போது ஆல்பம் பாடல்களை மாத்திரம் வெளியிட்டு வருகிறார்.
நான்காவது சீசன் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன் அனைவருக்கும் பிடித்தமானவர். இவரும் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் தான் இருக்கிறார்.
ஐந்து மற்றும் ஆறாவது சீனனில் வெற்றிப் பெற்றிருந்த ராஜு மற்றும் அசீமிற்கும் இதே நிலைமை தான்.
இவ்வாறு நூறு நாட்கள் உயிரைக் கொடுத்து விளையாட்டு மக்கள் மத்தியில் பிரபலமாகி வெளியில் வந்தால் சினிமாவாய்ப்புகள் கிடைக்கும் என காந்திருந்த அத்தனை டைட்டில் வின்னர்களும் தற்போது ஒரே ஒரு படத்தில் நடித்து விட்டு தலைமறைவாகியிருக்கிறார்கள்.