முடிவுக்கு வந்த குக் வித் கோமாளி! டைட்டிலை தட்டித் தூக்கியது யார் தெரியுமா?
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3 சீசன் பைனல்ஸின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.
குக் வித் கோமாளி
பிரபல ரிவியில் நடைபெற்று வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்று ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர். இதுவரை மூன்று சீசன்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதாவும், இரண்டாவது சீசனில் கனியும் டைட்டில் வின்னர்கள் ஆகினர். தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இதில் அம்மு அபிராமி, ஸ்ருதிகா, தர்ஷன், வித்யுலேகா ஆகியோர் பைனலுக்கு முன்னேறி உள்ளனர்.
இந்த வாரம் நடைபெற்ற வைல்டு கார்ட் சுற்றில் வெற்றிபெற்றதன் மூலம் சந்தோஷ் பிரதாப் மற்றும் கிரேஸ் கருணாஸ் ஆகியோரும் பைனலுக்கு சென்றுள்ளனர்.

சிவாங்கி வெளியிட்ட தகவல்
இந்நிலையில் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியும் நடந்து முடிந்துள்ளதாகவும், கடந்த வெள்ளிக்கிழமையுடன் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாம்.
இதனை சிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘பைனல்ஸ் ஷூட்டிங் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு முடிவடைந்ததாகவும், அனைவருக்கும் டாடா, அடுத்த சீசனில் பார்க்கலாம் என பதிவிட்டுள்ளார் சிவாங்கி.
இருப்பினும், இறுதிப்போட்டியில் வென்று டைட்டிலை ஜெயித்தது யார் என்கிற விவரத்தை சிவாங்கி வெளியிடவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் அந்த விஷயத்தை சீக்ரெட்டாக வைத்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க மக்களின் பேவரைட் ஷோ முடிவுக்கு வர உள்ளது அதன் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
