கணவருடன் பிரிவு...! சோகமான நிலையிலும் அடுத்தடுத்து குட் நியூஸ்களை அடுக்கி கொண்டே போகும் ரக்ஷிதா
பல சோகங்களுக்கு மத்தியில் அடுத்தடுத்து பல நிகழ்வுகளையும் சொல்லிக்கொண்டே இருக்கிறார் பிக்பாஸ் ரக்சிதா.
பிக்பாஸ் ரக்சிதா
இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடித்தத வேலையில் இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்துக் கொண்டார்.
ஆனால் தற்போது இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.
பின்னர் நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியலில் நடித்ததிருந்தார். பிறகு சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் தோன்றியிருந்தார்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டிருந்தார் மக்களால் வெற்றிப்பெறுவார் என அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட போட்டியாளர்களில் இவரும் ஒருவர்.
இந்நிலையில் தான் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது ராபர்ட் மாஸ்டர் காதல் வலையில் சிக்கி இன்னும் பிரபலமானார். ரக்சிதா தனது கணவனை விவாகரத்து பெற்று பிரிந்து வாழுகிறார் என்ற தகவல் அனைவரும் அறிந்ததே.
ஆனால் ரக்சிதா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது அவருக்கு தான் ஆதரவாக இருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். மேலும், பிக்பாஸ் வீட்டில் காதல் பிரச்சினைகளால் கிசு கிசுக்கப்பட்டு வந்தபோதிலும் அவரது கணவர் தினேஷ் வீட்டிற்கு வெளியில் இருந்து பாசிட்டிவாக பேசியிருந்தார்.
ஆனாலும் ரக்சிதா கணவருடன் இனி சேரவாய்ப்பில்லை என்பது போல பல பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார்.
குட்நியூஸ்
இந்நிலையில் தற்போது புத்தாண்டில் புது கார் ஒன்றையும் வாங்கி அனைவருக்கும் குட்நியூஸ் சொல்லியிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது புது படம் ஒன்றில் இனைந்திருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
அதில் ஒரு படத்தையும் பகிர்ந்து “இந்த திருநாளில் எனது அடுத்த தொழில்முறை நடவடிக்கையை அறிவிப்பதில் மகிழ்ச்சி #மீனிகரே திரைப்படம் இந்த அழகான சுறுசுறுப்பான, உணர்ச்சிமிக்க குழுவுடன் பணிபுரிவதில் ஆர்வமாக உள்ளது.....” என தலைப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.
இதனைப் பார்த்த அவரின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.